Header Ads



போதை பொருள் கடத்தலை தடுக்க, மரண தண்டனையா..? பத்வா குழு ஆராய்கிறது

போதைப்­பொருள் கடத்தல் மற்றும் வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற தீர்­மா­னத்­துக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா இது­வரை வர­வில்லை.

இஸ்­லாத்தில் குற்­ற­வியல் என்­பது விசா­ல­மான பகுதி. இது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வேண்­டிய ஒரு தலைப்பு. இலங்­கையில் ஓர் இஸ்­லா­மிய நாடல்ல. எனவே சிரேஷ்ட உல­மாக்கள், பத்வாக் குழு என்­ப­ன­வற்­றுடன் நீண்ட கலந்­து­ரை­யா­டலின் பின்பே உலமா சபையின் நிலைப்­பாடு அறி­விக்­கப்­படும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

போதைப்­பொருள் கடத்தல் மற்றும் வர்த்­த­கத்தில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு ஜனா­தி­பதி மர­ண­தண்­ட­னையை அமுல்­ப­டுத்த தீர்­மா­னித்­தி­ருக்­கின்ற நிலையில், இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; “சில இஸ்­லா­மிய நாடு­களில் போதைப்­பொருள் கடத்தல் மற்றும் வர்த்­த­கத்தில் குற்­ற­வா­ளி­யாக நிரூ­பிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை வழங்­கப்­ப­டு­கி­றது. இஸ்­லாத்தில் குற்­றங்­க­ளுக்கு என்­னென்ன தண்­டனை வழங்­கப்­ப­டலாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை நாட்டின் சட்­டங்­க­ளுக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை மதிப்­ப­ளிக்­கி­றது.


நாட்­டி­லி­ருந்து போதைப்­பொ­ருளை வேரோடு அழிக்­க­வேண்டும் என்ற கருத்தில் உலமா சபைக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதற்­கா­கவே அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உல­மாக்­க­ளையும், பெண்­க­ளையும் தேர்ந்­தெ­டுத்து உலமா சபையின் இளைஞர் விவ­காரப் பிரிவு போதைப்­பொருள் ஒழிப்புப் பயிற்­சி­களை வழங்­கி­யுள்­ளது.

பெண்­க­ளி­டையே போதைப்­பொருள் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு 5 பெண்கள் பயிற்­று­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். உலமா சபை போதைப்­பொருள் கடத்தல் மற்றும் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை வழங்­கப்­பட வேண்­டுமா-? என்­பது தொடர்­பி­லான நிலைப்­பாட்­டினை நீண்ட கலந்­து­ரை­யா­ட­லுக்குப் பின்பு வெளி­யிடும்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை சமூ­கத்­தைப்­போதைப் பொரு­ளி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. போதைப்­பொருள் ஒழிப்புப் பிர­சாரப் பணி­களில் உல­மாக்கள் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். இதற்­கென தேசிய அபா­ய­கர ஔட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையின் உத­வியும் பெற்றுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

இவ்­வ­ருடம் 24 மாவட்­டங்­களில், 9 மாவட்­டங்கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு ஒவ்வோர் மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் 10 உல­மாக்கள் வீதம் 90 உல­மாக்­க­ளுக்கு போதைப்­பொருள் ஒழிப்பு செயற்­பா­டு­களில் பயிற்­சிகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் இளைஞர் விவ­காரப் பிரி­வினால் பயிற்­சிகள் வழங்­கப்­பட்­டன. அவர்கள் குறிப்­பிட்ட மாவட்­டங்­களில் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களை இனம்­கண்டு அவர்­க­ளுக்கு உள­வியல் ரீதி­யான அறி­வு­ரை­களை வழங்கி வழி­ந­டத்­து­கி­றார்கள். பயிற்­சி­பெற்ற உல­மாக்கள் போதைப் பொருள் பாவ­னை­யினால் ஏற்­படும் பாதிப்­பு­களை குத்பா பிர­சங்­கங்கள் மூலம் மக்கள் முன் வைக்­கி­றார்கள்.

மாவட்ட ரீதியில் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­ன­வர்கள் உல­மாக்­களால் வழி­ந­டத்­தப்­ப­டு­வ­துடன் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கொழும்­பி­லுள்ள தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு அழைத்து வரப்­பட்டு அவர்கள் போதைப்­பொ­ரு­ளி­லி­ருந்து மீள்­வ­தற்கு வழி­காட்டல் வகுப்­பு­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன. இவ்­வ­ருடம் இவ்­வாறு அழைத்து வரப்­பட்­ட­வர்­களில் 7 இளை­ஞர்கள் புனர்­வாழ்வு மத்­திய நிலை­யங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். இவ்­வா­றான ஏற்­பா­டு­க­ளுக்கு தேசிய அபா­ய­கர ஔட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபை உத­வி­களை வழங்­கு­கி­றது.

இலங்­கையில் போதைப்­பொ­ருளை ஒழிப்­ப­தற்கு தொடர்ந்தும் அர­சாங்­கத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை திட்­டங்­களை வகுத்­துள்­ளது. அடுத்த வருடம் 2019 ஆம் ஆண்டு நாடெங்­கு­முள்ள உலமா சபையின் 150 கிளை­க­ளி­லி­ருந்தும் இப்­ப­ணிக்­காக உல­மாக்­களும் பொது­மக்­களும் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளனர். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் 150 கிளை­க­ளி­லி­ருந்தும் ஒரு ஆலிமும் ஒரு பொது மகனும் என்ற ரீதியில் இருவர் இந்தப் பணிக்கென தெரிவு செய்யப்படவுள்ளனர்.

150 கிளைகளிலிருந்தும் 300 பேர் தெரிவு செய்யப்பட்டு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். இவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் பிரசாரங்களிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

போதைப்பொருளற்ற ஒழக்க விழுமியங்கள் நிரம்பிய சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  எதிர்கால இலக்காகும் என்கிறார்.
-Vidivelli

1 comment:

  1. எல்லாம் சரி இஸ்லாத்தில் போதைப்பொருள் வியாபாரிக்கு தண்டனை என்ன என்று கூற கூட்டம் போட வேணடுமா? ஆச்சரிமான விடயம்.

    ReplyDelete

Powered by Blogger.