Header Ads



"சிங்களவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர்"

சிங்களவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் நினைப்பது போல் தூக்கம் எனின் நாம் விழிக்கும் நேரமும் உள்ளது. அப்போது எமது பேச்சை நிறுத்த முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் கல்வித்துறையை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. தகைமையுள்ளவர்களைத் புறந்தள்ளிவிட்டு அரசியலுடன் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அத்துடன் குறித்த பதவி உயர்வுக்கு எதிர்புத் தெரிவித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீது தாக்ககுதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே குறித்த நடவடிக்கைக்கு நாம் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிக்கிறோம்.

நாடு தற்போது சீர்குலைந்து விட்டதனால் ஜனாதிபதி தற்போதாவது வாய்ப் பேச்சுக்களை விட்டு விட்டு செயற்பாட்டு ரீதியாக நடவடிக்கை எடுக்க தயாராக வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் தயவு செய்து ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து வீடு செல்ல வேண்டும்.

மேலும் சிங்களவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பெண் புலி நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் நினைப்பது போல் தூக்கம் எனின் நாம் விழிக்கும் நேரமும் உள்ளது. அப்போது எமது பேச்சை நிறுத்த முடியாது என்றார்.

4 comments:

  1. இப்படிப்பட்ட மிலேச்சத்தனமான சிங்கள அரசியல்வாதிகளினால்தான், நாடு வங்குரோத்தாகி உள்ளது.

    ReplyDelete
  2. Palyangpang gongkahava nethuva, fist create the generation and society who can give the respect and values to others need along with crimeless.

    ReplyDelete
  3. நீங்கள் விழித்தவுடன் செய்வதற்காக  ஒரு வேலை காத்திருக்கிறது. 

    அதுதான், தமிழ், சிங்களம் ஆகிய இவ்விரு மொழிகளில் எம்மொழியிலும் இலங்கையின் எப்பகுதியிலும் எந்த அரச பணியையும் இலகுவாகச் செய்து கொள்ளக்கூடிய ஓர் சூழலை உருவாக்கி விடுவது.

    இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஜனாதிபதிகளை மாற்றிக் கொண்டிருப்பதல்ல.  ஜனங்களின் மனதுகளை மாற்றிவிடுவதுதான்.

    அப்போது, இலங்கையின் பிரச்சினைகள் சூரியனைக் கண்ட பனிபோல அகல ஆரம்பித்துவிடும்.

    நீங்கள் பேச விரும்பினால் பாரெல்லாம் கேட்கும் விதமாகப் பாராளுமன்றத்தில் இருந்து பேச வேண்டியது இதைத்தான்.

    ReplyDelete
  4. தமிழ் இனவாதிகளால் தான் சிங்கள இனவாதிகள் எழுச்சி பெறுகின்றனர்

    ReplyDelete

Powered by Blogger.