நாயினால் சண்டை - 5 குவைத் நாட்டினர் கைது - சுங்க அதிகாரிகளை தாக்கியதற்காக நீதிமன்றத்தில் நிறுத்தம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 5 பேரை, வெளிநாட்டு தம்பதியினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குவைத் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர முயற்சித்துள்ளதாக தெரிய வருகிறது.
சுங்க அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குவைத் நாட்டு தம்பதியர், இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதி குவைத்தில் இருந்து நாயை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த சந்தர்ப்பத்தில் விசாரணைகளை மேற்கொண்ட சுங்கப் பிரிவினர் நாயை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரினர்.
எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த குவைத் தம்பதி, விமான நிலையத்திற்கு வெளியே நாயை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனை அதிகாரிகள் தடுத்தமையினால் இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும், இந்த பிரச்சினையில் இதுவரையில் தூதரகம் தலையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த தம்பதி இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
Law of the land should be applied to anyone.
ReplyDeleteput them all in jail to learn a lesson. these people are not civilised yet, they need to be educated in law of the country. No plants, nor animals, nor trees should be taken from one country to another without certificate to transport. this is done to avoid any disease spread from one country to another.. it is all about ecology and Allah planted all plantations in His way and made his creatures in his own way.. Kuwaiti dogs might have so many diseases to spread in SL so it is better that immigration officials did it. We Muslim community should support our immigration officials in this case.
ReplyDelete5 kuwaitis or 2 kuwaitis...
ReplyDeleteநாய்ப் பாசம் நஜீஸ் பாசம்!
ReplyDeleteshould give highly punishment to remember in all life
ReplyDelete