பகிடிவதை செய்த 5 பிக்குகள் கைது - 11 நாட்களுக்கு விளக்கமறியல்
ருகுணு பல்கலைக்கழகத்தில் முதலாவம் வருட பிக்கு மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்ததாக கூறப்படும் ஐந்து பிக்குகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை மஜிஸ்ட்ரேட் நீதிபதி பவித்ரா சஞ்ஜீவனி பதிரண இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
ருகுணு பல்கலையில் மனித நேயமற்ற முறையில் பிக்குகள் விடுதியிலுள்ள குளியலறையில் நிருவாணமாக வைத்து முதலாம் வருட பிக்கு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பிக்குகளையும் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
வைத்திய பரிசோதனை ஒன்றுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு செல்லுமாறு பொலிஸார் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பிக்குவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இருப்பினும், தான் மீண்டும் பல்கலைக் கல்வியில் ஈடுபடப் போவதில்லையெனத் தெரிவித்து விட்டு குறித்த தேரர் மீண்டும் விகாரைக்கே சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாத்தறை தலைமைப் பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.
Even Hamathurus aren't exeception for ragging!.May be need a lesson from real Budhism??
ReplyDeleteபிக்குகளில் சிலர் இலங்கைக்குக் கிடைத்த சாபக்கேடே என்று சொல்ல வேண்டும்.
ReplyDelete