Header Ads



விக்னேஸ்வரனுக்கு மகிந்த போட்ட பிச்சை - 48 தடவை விமானங்களில் இலவச பயணம்

-பாறுக் ஷிஹான்-

வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சந்திரசிறியின் மூலம் பெற்ற விசேட அனுமதியின் பெயரில் யாழில் இருந்து கொழும்பிற்குச் சென்ற விமானப் பயணங்களிற்காக இதுவரையில் 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாகனத்தில் கொழும்பு சென்றுவந்த நிலையில் முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தான் கொழும்பிற்கு விமானம் மூலமே சென்று வருவதனால் முதலமைச்சரின் பயணத்திற்கும் மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யும் அரச நிதியில் அனுமதிக்கலாம் என விசேட அனுமதியினை வழங்கினார்.

மகிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்ட இந்த அனுமதியின் பிரகாரம் 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான 4 ஆண்டுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் அரச செலவில் 48 தடவைகள் விமானம் மூலம் கொழும்பிற்கு சென்று வந்துள்ளார். இதற்காகவே குறித்த 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் முதலமைச்சர் 2014ம் ஆண்டில் 11 தடவைகளும் , 2015ம் ஆண்டில் 13 தடவைகளும் , 2016ம் ஆண்டில் 15 தடவைகளும் பறப்பில் ஈடுபட்டுள்ளதோடு 2017ம் ஆண்டில் 9 தடவைகள் பறப்பில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு பயணித்த 48 தடவைகளும் தன்னுடன் ஓர் உதவியாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு அழைத்துச் சென்ற உதவியாளருக்கும் மாகாண சபையின் நிதியே வழங்கப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் 2014 , 2015ம் ஆண்டுகளில் ஓரு சேவைக்காக 35 ஆயிரம் ரூபாவீதம் பணம் செலுத்தப்பட்ட நிலையில் 2016ம் ஆண்டு முதல் இன்றுவரையில் ஓர் சேவைக்காக 58 ஆயிரம் ரூபா வீதம் பணம் செலுத்தப்படுகின்றது. இதேநேரம் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வேறு எந்த மாகாண முதலமைச்சரிற்கும் குறித்த சலுகை தற்போதுவரையில் வழங்கப்படுவது கிடையாது.

11 comments:

  1. இது விக்கியின் சிறப்பு உரிமை, பிச்சை இல்லை.

    வடக்கு CM யை மற்றய மாகாண CM களோடு ஒப்பிட முடியாது.
    உதாரணம்:- UK பிரதமர், இந்திய பிரதமர், UN, Canada, USA சிறப்பு தூதர்கள் எல்லாரும் விக்கியை யாழ்பாணம் தேடிப்போய் சந்திக்கிறார்கள். மற்றைய CM களை ஏன் நாயே என்று கூட ஒருவரும் கவனிப்பதில்லையே. கிழக்கில் தமிழ்ர்கள் இருப்பதால் கிழக்கு CM யை சிலர் சந்தித்தார்கள்.

    ReplyDelete
  2. விக்கி போன்ற இனவாதிகளுக்கு, எப்படித்தான் இலங்கை அரசு பிச்சை போட்டாலும், நன்றியறிதல் என்ற குணம் அவரிடம் சிறிதும் இல்லை.

    ReplyDelete
  3. மஹிந்த பிச்சை போட்டது ஒன்றும் அவர் பணத்தில் அல்ல. மக்கள் பணத்தில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற மஹிந்தவும் பிச்சை காரன் தான்..

    ReplyDelete
  4. மேற்கத்திய தூதர்கள், மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தலைவர்களை சந்திப்பதை விட, யாரெல்லாம் அந்தந்த நாடுகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்களோ, அவர்களை சந்திப்பதில்தான் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இது மேற்கத்திய நாட்டுத் தூதுவர்கள் பிறவிக் குணம்.

    அந்த வகையில், நாட்டுத் துரோகியாக வலம் வரும் இனவாத விக்கியை, மேற்கத்திய தூதர்கள் சந்திப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    ReplyDelete
  5. வட மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யும் பணம், மக்களுக்கு பயன் அளிக்க வேண்டும்.

    அந்தப் பணத்தில், ஹெலிகொப்டரின் மூலம் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள அனுமதியளித்துவிட்டு, மஹிந்த தற்போது ஏன் உளறுகிறார்?

    ஹெலியில் பயணிப்பதை உடன் நிறுத்தி, காரில் பயணிக்க மஹிந்த உத்தரவு இட்டால், நல்லது.

    ReplyDelete
  6. மேற்கத்திய தூதர்கள், மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தலைவர்களை சந்திப்பதை விட, யாரெல்லாம் அந்தந்த நாடுகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்களோ, அவர்களை சந்திப்பதில்தான் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இது மேற்கத்திய நாட்டுத் தூதுவர்கள் பிறவிக் குணம்.

    அந்த வகையில், நாட்டுத் துரோகியாக வலம் வரும் இனவாத விக்கியை, மேற்கத்திய தூதர்கள் சந்திப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    ReplyDelete
  7. எடுப்பது பிச்சை ஆனால் வீம்பிற்கு குறைவில்லை.

    ReplyDelete
  8. என்ன முட்டாள் தனமான செய்தி , நாடு மஹிந்தவின் சொத்தா ? விக்கியும் ,இலங்கை பிரஜை தானே , , இங்கு பிரஜை அல்லாத மஹிந்தவின் சொந்தம் நாட்டை சூறையாடியது மறந்து போச்சா , சிங்கள மாகாணசபை மந்திரிமார் உலகம் சுற்றுவது இதை எழுதியவருக்கு தெரியாதா ,

    ReplyDelete
  9. @ Ajan Antonyraj
    Northern Politicians like beggars who itching their wounds.. they want ppl to suffer so that they can survive in politics.. thats y everyone visit there.. dont blubber.. CV creates more prblms in reason days talking racism to attract Tamil innocent ppls and keep the situations in a turmoil. He never tries to get the benefits of so called Good governance instead he does work for an agenda of Rajapaksha with his relation Vasudeva another game player

    ReplyDelete
  10. Sampanthan tna,
    மற்றைய மாகாண CM கள் (கிழக்கில் வெட்டியாக இருந்தால், கடையிலை கடற்படை வீரிடம் திட்டு வாங்கிய அகமட் நசீர் உட்பட) எல்லாருக்கும் இலவசமாக அரசாங்க பஸ்சில் கொழும்பு போகலாமாமே. பார்த்தீர்களா, மகிந்த மாமா மற்றய CM களுக்கும் இலவச பயணங்கள் செய்துள்ளார்.

    ReplyDelete
  11. All the CM has facilities to travel by air which is limited.

    Mahinda says Racist Vicky surpassed the limit and spent so much money from allocated money to the North.

    This proves Racist Vicky misused so much people’s money.

    Government should intervene and stop embezzlement of people’s money of North.

    ReplyDelete

Powered by Blogger.