'டுக் டுக்' முச்சக்கர வண்டி - 30 ஆம் திகதி கொழும்பில் அறிமுகமாகிறது
“டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டம் இந்த மாத இறுதியில் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
குறித்த திட்டத்தின் தொடக்க விழா எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையானது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதும், சினேகபூர்வமானதுமான முச்சக்கரவண்டி சவாரியை வழங்கும் நோக்கிலேயே முதல் முறையாக இந்த “டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவின் போது நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்த திட்டம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் விஷேட பயிற்சி ஒன்று முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு "டுக் டுக்" இலட்சினை வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment