Header Ads



30 துப்பாக்கி குண்டுகளுடன், மக்களின் உதவியை நாடிவந்த யானை


இலங்கையின் ஹம்பாந்தோட்டை வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், வலியால் அவதிப்பட்ட யானை ஒன்று மக்களின் உதவியை நாடி வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதை பார்த்த மக்கள் மருத்துவருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர், குண்டடிபட்ட இடத்திலிருந்து சீழ் வடிவதாகவும், காயங்களிலிருந்து மீள ஆறு மாதங்கள் ஆகலாம் எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து காயமடைந்த யானை மேல் சிகிச்சைக்காக மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1986ம் ஆண்டிலிருந்து இலங்கை யானை அருகி வரும் இனமாக பட்டியலிடப்பட்டது, எனவே யானையை கொல்வது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டதுடன், நிரூபிக்கப்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இருப்பினும் ஒரு ஆண்டுக்கு பிறப்பு விகிதம் 100 என்றாலும் இறப்பு விகிதம் 250 ஆக உள்ளது, எனவே யானைகளை காப்பாற்ற இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

No comments

Powered by Blogger.