2 பலஸ்தீன விஞ்ஞானிகள் அல்ஜீரியாவில் படுகொலை - மொசாட்டின் படுபாதகச் செயல்
அல்ஜீரியாவில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் இரு பலஸ்தீன விஞ்ஞானிகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அல் ஜீரியாவிலுள்ள பலஸ்தீன தூதரகம் அறிவித்துள்ளது.
காஸா பள்ளத்தாக்கின் கான் யூனிஸைச் சேர்ந்த 34 வயதான சுலைமான் அல் பர்ரா மற்றும் மொஹமட் அல்பானா ஆகிய இருவருமே கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் இருவரும் நச்சுவாயுவை சுவாசித்ததன் மூலமோ அல்லது மின்சாரக் கோளாறு காரணமாக ஏற்பட்ட மின்சாரத் தாக்கத்தினாலோ உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இரு விஞ்ஞானிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இரு தினங்களுக்கு முன்னர் அவர்கள் இறந்துவிட்டதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் கட்டடத்திலிருந்து வெளிவந்த வாயுவின் மணத்தினை அயலவர்கள் சுவாசித்ததைத் தொடர்ந்தே அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காஸாவிலுள்ள உள்ளூர் செய்தி முகவரகமொன்று தெரிவித்துள்ளது.
இறந்தவர்களுள் ஒருவரின் உடல் கதவருகிலும் மற்றவரின் உடல் கட்டிலிலும் காணப்பட்டதாக அத் தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எமக்கு எந்த விபரங்களும் தெரியாது. அல்ஜீரியா மற்றும் பலஸ்தீன தூதரக அதிகாரிகள் இணைந்து என்ன நடந்திருக்கின்றது என்பதை புரிந்து கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன் என அல்பானாவின் சகோதரர் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக உலகம் முழுவதிலிலும் பல பலஸ்தீன விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான சம்பவங்களுடன் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தொடர்பு காணப்படுகின்றது.
மலேசியாவில் பலஸ்தீன விரிவுரையாளரொருவர் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தொடர்பு இருந்ததாக பலஸ்தீன ஜிஹாத் அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.
கொல்லப்பட்ட 35 வயதான பாதி மொஹமட் பத்ஷ் தலைநகர் கோலாலம்பூரில் கூட்டுத் தலைமைப் பிரதேசமான இடனாம் புடமேரியிலுள்ள அவரது இல்லத்திற்கு அருகில் வைத்து அதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் அவரைச் சுட்டுக் கொன்றதாக மலேசியப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2016 டிசம்பர் மாதம் 15 ஆந் திகதி துனிசியாவில் ஸ்பெக்ஸுக்கு வடக்கே ஏழு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள எல் ஐன் நகரில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு முன்னால் வைத்து பலஸ்தீன ஆளில்லாவிமான நிபுணர் அமாஹமட் அல்-ஸவாரி பல துப்பாக்கிச் சூடுகள் காரணமாகக் கொல்லப்பட்டார்.
ஸவாரி 10 ஆண்டுகள் அதமு அமைப்பில் அங்கம் வகித்திருந்ததாகவும் அமைப்பின் ஆளில்லாவிமான நிகழ்ச்சித்திட்டத்தைக் கண்காணித்து வந்ததாகவும் தெரிவித்திருந்த பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான இஸ்ஸடீன் கஸ்ஸாம் படையணி, இக் கொலை இஸ்ரேலினாலேயே புரியப்பட்டதாகக் குற்றம்சாட்டியது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆந் திகதி ஐக்கிய அரபு அமீரகமான துபாயிலுள்ள அல் புஸ்டான் ரொட்டானா ஹோட்டலில் வைத்து ஹமாஸின் சிரேஷ்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரும், கஸ்ஸாம் படையணியின் தாபகர்களில் ஒருவருமான மொஹமட் அப்துல் றஊப் அல்-மப்ஹொஹ் மொசாட் முகவர்களினால் படுகொலை செய்யப்பட்டார்.
Good to hear. Palestine is a terrorist state and the ppl of myst obey the costitution of Israelm otherwise they can leave the Paleztine which is a part of Israel.
ReplyDeleteWhoever promotes the terrorism whether Scientists or anybody need to be punished with the maximum penalty. We should praise tge govt of Israel for their activities to contril spreading islamic virus
@s..tna, “பலஸ்தீனத்தில் விஞ்ஞானிகள் வேறு இருக்கிறார்களா?. சொல்லவே இல்லை
ReplyDeleteஅடே Anusath,
ReplyDeleteதொடர்ந்தும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக கண்மூடித்தனமாக உளராதே! நீ இப்போதுள்ள உனது நிலையிலே மண்டையைப் போடும்போது, உனது கைசேதம் உனக்கு விளங்கும்!!!
1ம் மற்றும் 2ம் உலகப்போரை தோற்றுவித்த யூதர்கள் சமாதானம், பண்பாட்டுடன் வாழும் மனிதர்களா? பயங்கரவாதிக்கு தானே இன்னோரு பயங்கரவாதி நண்பன். தமிழ் ஈனப்போரில் இஸ்ரேல் நிறைய உதவிசெய்திருக்கின்றது- முஸ்லிம்கள் பங்கு கொள்ளவில்லை, ஆதரவு தெரிவிக்கவுமில்லை. இதுதானே காழ்புணர்ச்சிக்கு காரணம்!
ReplyDeleteஅடேய் அனுஷாத் தமிழ் பயங்கரவாத நாயே ஏண்டா முள்ளிவாய்க்காலில் செத்த பயங்கரவாதிகளுக்காக ஒவ்வொரு வருடமும் நாயை போல் குறைத்து ஒப்பாரி வைக்கின்றீர்கள்? இலங்கையர்களின் பார்வையில் விபச்சார புலி கூட்டமும், பயங்கரவாதிகளும் தானே முள்ளிவாய்க்காலில் செத்தார்கள் அவர்களை ஒலித்ததில் என்ன தவறிருக்கின்றது நாயே
ReplyDelete