Header Ads



அமித்துக்கு 2 வழக்குகளில் பிணை, தொடர்ந்தும் சிறையில் வைப்பு

கண்டி பகு­தியில் அண்­மையில் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றைகள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மஹ­சொஹொன் பல­கா­யவின் தலைவன் அமித் வீர­சிங்க உட்பட 10 பேருக்கு இரு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் இரு வழக்குகள் தொடர்பில் அவர் இம்­மாதம் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இதற்­கான உத்­த­ரவை தெல்­தெ­னிய மாவட்ட நீதிவான் ஷானக கலன்­சூ­ரிய நேற்று பிறப்­பித்தார்.

அமித் வீர­சிங்­க­வுக்கு எதி­ராக மூன்று வழக்­குகள் தெல்­தெ­னிய நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அவற்றில் இரு வழக்­குகள் தொடர்பில்  தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 6 சரீரப் பிணை­களில்  செல்ல நீதிவான் அனு­ம­தித்­தி­ருந்தார். எனினும்  பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு தாக்கல் செய்­தி­ருந்த வழக்கில் அவ­ருக்கு பிணை  வழங்க நீதி­மன்றம் மறுத்­தது. அதன்­படி அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

MFM.Fazeer

2 comments:

  1. He is innocent and he will be released soon.

    ReplyDelete
  2. Amith Weerasinghe is innocent or not he has charged at court of law under many charges
    Only released on bail in certain cases and still under custody as under good government action taken for communal riots
    Muslims can't forget when In Alutgama Hundreds of houses business premises burnt damaged economically our community aimed noone arrested cases filed
    Judge the difference But even under this government we are still facing difficulties
    Communal difference created with blessing of previous government rooted well



    ReplyDelete

Powered by Blogger.