27 ஆம் திகதி, இரத்த நிலவு வருகிறது - நூற்றாண்டின் அதிசயம் என வர்ணிப்பு
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் (Blood Moon) எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படவுள்ளதாக நாசா ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வழமையாக பிளட் மூன் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நேரடியாக நிலவின் மீது படாமல் பூமியின் வளிமண்டலத்தின் மேல் பட்டு அந்த கதிர்கள் நிலவின் மீது விழும், அதனால்தான் அது சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கின்றது.
இதன் காரணமாகத்தான் மற்ற சந்திர கிரகணங்களைப்போல இல்லாமல், இது பூமியின் நிழலை கடந்து நேரடியாக கடந்து செல்லுகின்ற வரையிலும் நம்முடைய பார்வைக்குத் தென்படுகின்றது.
இந்நிலையில், 82 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மிக நீண்ட சந்திர கிரகணம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இந்த நூற்றாண்டினது மிக நீண்ட சந்திர கிரகணமாகவும், அதிசயமாகவும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில் மீண்டும் இம்மாதம் 27ஆம் திகதி சந்திர கிரகணம் இடம்பெறவுள்ளது.
இந்த கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் இந்த கிரகணத்தை 27ஆம் திகதி பின்னிரவு முதல் 28ஆம் திகதி அதிகாலை வரை அனைவரும் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திர முழுக்கிரகணத்தின்போது, சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 இலட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோ மீற்றர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூமியின் கிழக்கு அரைக்கோளத்தில் இருக்கின்ற தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா மற்றுமட் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியில் வாழும் மக்கள் பார்க்க முடியும் என்பதோடு ஆர்ட்டிக் மற்றும் பசுபிக் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் இதனை பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
ReplyDelete(அல்குர்ஆன் : 13:2)
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
(அல்குர்ஆன் : 35:13)
www.tamililquran.com