Header Ads



டிசம்பர் 23 அல்லது ஜனவரி 5 மாகாணத் தேர்தல் - ரணில் தலைமையில் தீர்மானம்

மாகாண சபை தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 5 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

மாகாண சபை தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கும் நோக்கில்  இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் கருஜயசூரிய, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தாபா மற்றும் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போதே மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. எனினும் எந்த முறைமையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து கட்சி தலைவர்களினால் இணக்கபாட்டுக்கு வர முடியவில்லை. அதாவது சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் புதிய முறைமைக்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன் தேர்தலை தாமதப்படுத்தாது பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுத்தினர்.

மேலும் பாராளுமன்றத்தின் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்து தந்தால் தன்னால் மேற்குறிப்பிட்ட திகதியில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

இந் நிலையல் தேர்தல் முறைமை தொடர்பாக இணக்கத்திற்கு வரும் நோக்கில் அடுத்த வாரம் வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் மீண்டும் கூடி ஆராய்வதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.