220 கிலோ, தங்கம் எங்கே..?
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மீட்கப்பட்ட தங்கத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தனக்கு சந்தேகம் நிலவுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அவ்வேளையில் இராணுவத் தளபதியாக இருந்த நீங்கள் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தீர்கள். யுத்தம் முடிந்ததன் பின்னர், அலரி மாளிகைக்கு கொள்கலனில் கொண்டுவந்ததாகக் கூறப்படும் தங்கம் மற்றும் பணத்திற்கு என்ன நடந்ததது? எனக் கேட்டமைக்கு,
இராணுவத் தளபதிப் பதவியிலிருந்து தான் ஓய்வு பெற்றதன் பின்னர் அது அலரிமாளிகைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த அவர், தான் இருக்கும்போது சுமார் 220 கிலோ தங்கத்தை மீட்டதாகவும் அவற்றை தாம் சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப எழுத்துமூல ஆவணங்களுடன் வவுனியா பொலிஸாரிடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னராக செயற்பாடுகளைப் பாதுகாப்பு அமைச்சே மேற்கொண்டிருக்க வேண்டும். அதற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கூற முடியாமல் தற்போது ஊமை போன்றிருப்பதாகவும் அது குறித்து தனக்கும் தற்போது சந்தேகமாகவே இருப்பதாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
220 கிலோகிராம் தங்கம் என்பது 27,500 பவுன் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது
LTTE & MR both were looters.
ReplyDeleteஇது போன்ற பல ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணங்கள் இந்த சாக்கடை அரசியல்வாதிகளிடம் உள்ளது. இவைகளை பறிமுதல் செய்து நாட்டின் கடன் சுமையைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களின் வாழ்வாதாரத்தை ஸ்திர நிலைப்படுதக்கூடிய ஒரு முதுகெழும்புள்ள ஒரு நல்ல ஆண் அரசியல்வாதி வரும் வரை நம் நாட்டுக்கு இதுதான் கதி.
ReplyDeleteWell said ,Abu Abdullah.
ReplyDeleteஇத்தங்கம் பெரும்பாலும் வடக்கிலிருந்து ஆயுத முனையில் பயங்கரவாதிகளால் இரண்டு மணித்தியாளங்களுக்குள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமானவையாக இருக்க முடியும்.
ReplyDeleteஅவர்களது நகை மாளிகைகள், பெண்கள் அணிந்தவை மற்றும் குழந்தைகளின் காதுத் தோடுகளைக்கூட அவர்கள் பார்த்திருக்கும்போதே மிலேச்சத்தனமாக அபகரித்த சேகரிப்புகளாக இவை இருக்கக் கூடும்.
அரசாங்கம் உரிய விசாரணைகளை சரியாக மேற்கொண்டு, இவற்றை மீளப் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்க, முஸ்லிம் அமைச்சர்களையும் பாராளுமன்ற அங்கத்தவர்களையும் அவர்களுக்கு நெருங்கிய மக்கள் வலியுறுத்துவார்களாக.