Header Ads



21 ஆம் திகதி மு.மீ.போ. பொதுக்கூட்டம், கபீர் பிரதம அதீதி - டயறியும் வெளியாகிறது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மாநாட்டின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மூன்று மேற்படி பதவிகளுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நியமனக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 30 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளத்து.

2

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு மீடியா டயறியின் (ஆநனயை னுசைநஉவழசல) 6வது பதிப்பினை வெளியிட போரத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்கள், அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், தூதரகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் முதலான பல்வேறு முக்கிய தகவல்களை உள்ளடக்கிய இந்த மீடியா டயறியில் வழமை போன்று போரத்தின் அங்கத்தவர்களின் விபரங்கள் உள்ளடக்கப்படவுள்ள அதேசமயம் இதற்கான விண்ணப்பக்காலம் கடந்த 03ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தபால் சேவை வேலை நிறுத்தத்தினால் ஏற்பட்டுள்ள தாமதம் காரணத்தினால் மேற்படி விண்ணப்பத்திகதி எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மீடியா போரத்தில் அங்கம் வகிக்கும் சகல அங்கத்தவர்களுக்கும் மீடியா டயறி மற்றும் புதிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் ஏற்கனவே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர். தபால் சேவையின் தாமதங்கள் காரணமாக இதுவரை விண்ணப்பம் கிடைக்கபெறாதவர்கள் 0773112561 அல்லது 0718030818 என்ற கையடக்கத் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் விண்ணப்படிவம் கிடைக்கப்பெற்றவர்கள் விண்ணப்பத்துடன் வர்ணப் புகைப்படத்தையும் இணைத்து மீடியா டயறிக்கான 500 ரூபாவையும், அடையாள அட்டைக்கான 300 ரூபாவையும் ளுசi டுயமெய ஆரளடiஅ ஆநனயை குழசரஅ என்ற பெயருக்கு மணியோடர் மூலம் செலுத்தியோ அல்லது ளுசi டுயமெய ஆரளடiஅ ஆநனயை குழசரஅஇ   டீயமெ ழக ஊநலடழn (டீழுஊ)இ டுயமந ர்ழரளந டீசயnஉh -  யுஃஊ ழே: 3268511 வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டோ அதற்கான பற்றுச் சீட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கும் அதேசமயம் அரளடiஅஅநனயைகழசரஅளூபஅயடை.உழஅ எனும் அல்லது ளாihயளெஅநனயைளூபஅயடை.உழஅ  எனும் மின்னஞ்சல் ஊடாகவும் அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


No comments

Powered by Blogger.