Header Ads



ஞானசாரருக்கு எதிரான வழக்கு 18 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

குறித்த இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்றை தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதி தரப்பின் எழுத்துமூல விளக்கம் முன்வைக்கப்படவிருந்தது. 

இருப்பினும் பிரதிவாதி தரப்பில் எழுத்துமூல விளக்கம் தயார் படுத்தப்படவில்லை என்றும் அதற்காக வேர்ஓர் தினத்தை பெயரிடுமாறும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

இதற்கமைவாக பிரதிவாதி தரப்பிலான எழுத்துமூல விளக்கத்தினை நாளைமறுதினம் வெள்ளிக்கழமை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

2 comments:

  1. We know that he will be released without any punishment. No point talking about him.

    ReplyDelete
  2. பிரோசனமில்லாத வக்குகளும் வீண்டடிக்கப்படும் பண்மும் நேரமும். ஏற்கனவே சிறையில் இருந்தவருக்கு ஜாமின் கொடுத்து வெளியில் எடுத்தீர்கள், இப்பவும் அதனையே செய்வீர்கள், அப்போ என்ன நகைச்சுவைக்கு இந்த நீதிமன்றமும், சட்டமும், அதற்கெனெ ஒரு அமைச்சும் அமைச்சரும்? எல்லோருமே திருடர்கள். வெளியாக இருக்கும் மரணதண்டனை ஆயத்தங்க்களில் முதலில் நீதிபதிகளை தூக்கில் இடவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.