Header Ads



தமிழ் கூட்டமைப்பின் 10 எம்.பிகளுக்கு அபாயம்

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து அவர்களது பதவிகளில் நீடிப்பது தொடர்பில் சவால்கள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்டதோடு, புலிகளுக்குச் சார்பான நிகழ்வுகளில் பங்கேற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்கள் கிடட்ததுள்ளதாக கூட்டு எத்திரணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வெளியான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிப்பதோடு, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தவுள்ளதாகவும் அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டு கருத்துக்களை வெளியிடுவதோடு, பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் விழாக்களில் பங்கேற்பது தீவிரவாத செயற்பாட்டுக்கு ஆதரவளிப்பதாகவே அமையுமென்பதோடு, அரசியல் யாப்பினை மீறும் செயலெனவும் சட்டத்தரணி பிரதீபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு யாப்புக்கு எதிராகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

3 comments:

  1. இனவாதிகளின் பூச்சாண்டி

    TNA எப்போது, யாரால் ஒருவாக்க பட்டது?, இது உலகத்திற்கே தெரிந்த விடயம்.
    இப்போது அது தான் இலங்கையின் உத்தியோகபூர்வ எதிர் கட்சி, இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  2. This is a challenge to Tamils not for TNA.SriLankan govt want the rest of Tamilians to carry arms. So what Tamilians can do. Every thing will be happened as the destiny already written

    ReplyDelete
  3. அரசியல் போர்வையில் இருக்கும் தமிழ் அடிப்படைவாதிகளையம் பிரிவினைவாதிகளையும் அரசாங்கம் இரும்பு கரம்கொண்டு ஒடுக்கவிட்டால் பயங்கரவாத ஈழ கோட்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது

    ReplyDelete

Powered by Blogger.