Header Ads



"சட்டங்களை மாற்று" இல்லையெனினில் பல தேரர்கள் கைது செய்யப்படுவார்கள்...

ஜனாதிபதி  தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி  ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பினை வழங்குவதற்கு அனைத்து பிக்குகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என தேசிய புத்திஜீவிகள் பிக்குகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அச் சங்கத்தினர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த மத கோட்பாடுகளுக்கு நாட்டின் பொது சட்டம் முரணாகவே காணப்படுகின்றது. மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் மத சித்தாந்தங்களுக்கு அமைய   சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லையெனினல் எதிர்காலத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை போல் பல தேரர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இராணுவத்தினருக்கு எதிராக இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தமையினால் தண்டிக்கப்பட்ட ஞானசார தேரர் மத சட்டங்களை பின்பற்றியே கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் இவ்விடயம் சட்டத்தின் பார்வையில் பாரிய குற்றமாகவே காணப்பட்டது.

இந் நிலையில் சிறையில் ஞானசார தேரரை சக கைதிகளை போன்று  நடத்த சிறைசாலை அதிகாரிகள் முற்படுவது பௌத்த மதத்தினை அவமதிப்பதாகவே காணப்படுகின்றது. துறவு வாழ்க்கையினை மேற்கொள்ளும் தேரர்களின் சிறப்பு அடையாளமாக காணப்படும் காவியினை  கலைக்க முற்படுவது மதத்தின் புனித தன்மையிற்கு புறம்பான செயற்பாடாகும்.

எனவே நாட்டின் பொது சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் சில திருத்தங்களை தற்போதைய தேவைக்கிணங்க மாற்றியமைக்க வேண்டும்.

மேலும் ஜனாதிபதி  தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி  ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பினை வழங்குவதற்கு அனைத்து பிக்குகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றது. 

2 comments:

  1. குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அவனை தேரத்துவத்திலிருந்து நீக்குவதே சரியான பெளத்தமதம். குற்றமிழைப்பவனுக்கு பிக்கு என்று பெயர் சூட்டுவதே பிழை என்பதை விடுத்து ஞானசாரனைப் போல் பல தேரர்கள் செய்யப்படுவார்கள் என்றால் இவர்களெல்லாம் தேரர்களா ? தேய்ந்த செருப்புக்களா? என்று தெரியவில்லை

    ReplyDelete
  2. Appadi endraal kaavi Udai aninthu mathu matrum maathu vilaiyattu vilaiyadalam, matra sattangalai meeralam. Nalla irukku intha sinthanai

    ReplyDelete

Powered by Blogger.