"வினைத்திறனான பிறைக்குழுவை, அமைப்பதற்கான சில ஆலோசனைகள்"
-சப்ராஸ் புஹாரி-
இன்றிருக்கும் பிறைக்குழுவின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து வரும் நிலையில் தீர்வாக பிறைக்குழுவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரவலாகப் பேசப்படுகின்றன.
இந்நிலையில் அக்குழு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான ஓர் ஆலோசனையை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
முதலில் பிறை பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணவேண்டும்.
இந்தக் கேள்விக்கு பதில் தேடவேண்டுமானால் நாம் பிறை பற்றிய சில அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். பிறை சம்பந்தமான முடிவு எடுப்பதற்கு இரண்டு விதமான நிபணர்கள் தேவைப்படுகிறார்கள். முதலாவது, நாம் பின்பற்றுவது தேசியப் பிறையா, பிராந்தியப் பிறையா, சர்வதேசப் பிறையா அல்லது பிறையைக் கணிப்பதா என்ற கேள்விக்கு விடை தரவேண்டிய மார்க்க அறிஞர்கள், இக்கேள்விக்கு விடை கண்டு விட்டால் அடுத்த கேள்வி ஒவ்வொரு மாதமும் பிறை பற்றிய முடிவை எடுக்க வேண்டியவர்கள் யார்? என்பது.
அப்பணியைத் தற்பொழுது பிறைக்குழு செய்து வருகிறது. தற்பொழுது உள்ள பிறைக்குழு பொருத்தமானது தானா அல்லது அதில் மாற்றம் நிகழ வேண்டுமா என்பது பற்றியே சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.
இங்கு நான் தற்போது இருப்பவர்களின் மீதுள்ள நம்பகத்தன்மை பற்றி பேச முனையவில்லை. மாறாக அவர்களின் தகைமை பற்றியே பேச விழைகிறேன்.
பிறை என்பது வானியல் என்ற இயற்கை விஞ்ஞானப் பிரிவைச் சார்ந்த ஒரு விடயம். பிறைக்குழுவின் பொறுப்பு குறித்த தினத்தில் பிறை தென்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளனவா, பிறை தென்பட்டதை உறுதிப்படுத்தல் போன்றனவே. பிறை தென்பட்டதா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டால் மாதத்தின் ஆரம்பத்தைத் தீர்மானிப்பது எப்படி என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்த விடயம். பிறை குறித்த தினத்தில் தெரியுமா இல்லையா? தென்பட்டதாகச் சொல்லப்படுவது நம்பகமானதா இல்லையா? என்ற தீர்மானம் எடுப்பதற்குத் தேவையான அறிவு வானியல் பற்றிய அறிவே.
வானியல் சம்பந்தமாக ஆழ்ந்த அறிவில்லாதவர்களிடம் பிறை பற்றிய தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பைக் கொடுப்பதோ அல்லது அவர்களை இக்குழுவில் உள்ளடக்குவதிலோ எந்த அர்த்தமும் இல்லை.
உண்மையில் வானியலை முறையாகக் கற்காத இஸ்லாமிய அறிஞர்களும் இக்குழுவுக்குப் பொருத்தமற்றவர்கள் தான். காரணம், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இது விஞ்ஞானத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப் படவேண்டிய விடயம்.
இலங்கை ஒரு இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால் பிறை பற்றிய முடிவை அறிவிக்கும் பொறுப்பு இலங்கை வானிலை ஆய்வு மையத்திற்கே வழங்கப்பட்டிருக்கவேண்டும். அல்லது ஐக்கிய அமெரிக்கா இஸ்லாமிய நாடாக இருந்தால் இப்பொறுப்பு NASA வுக்கு வழங்கப் பட்டிருக்கவேண்டும்.
இலங்கையில் பிறைக்குழு எவ்வாறு அமைய வேண்டும்? சட்ட ஆலோசனைகளுக்கு சட்டத்தரணிகளை நாடுகிறோம், சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வைத்தியர்களிடம் தீர்வு கேட்கிறோம், தொழிநுட்ப ஆலோசனைகளுக்கு பொறியியலாளர்களை நாடுகிறோம். அதே போல் வானவியல் சார்ந்த பிரச்சினைக்கு தீர்வை வானவியல் நிபுணர்களிடமே பெறவேண்டும்.
எமக்கு இலங்கை வானிலை அவதான நிலையத்தில் முழுமையாகத் தங்கியிருக்க முடியாத நிலையில் நாம் எமது சமூகத்திலுள்ள வானியலை முறைப்படி கற்ற துறைசார் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும், அக்குழுவில் வானியலைப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்கள், வானியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள், வானியலுடன் சம்பந்தமான உதாரணமாக, வானிலை ஆய்வு மையம் போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் நிபுணர்கள் போன்றவர்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். இவர்களின் பொறுப்பு பிறை தென்பட வாய்ப்புகள் உள்ளதா இல்லையா தென்பட்டதாகச் சொல்லப் படும் தகவல் நம்பகமானதா இல்லையா போன்ற தீர்மானங்களை எடுப்பதும் எத்தினத்தில் குறிந்த மாதம் ஆரம்பமாகும் என்ற முடிவை அறிவித்தலுமே.
இம்முடிவை அறிவிப்பதற்கு மார்க்க அறிஞர்கள் போன்ற வேறு துறை சார்ந்தவர்கள் அவசியமில்லை. பிக்ஹு சார்ந்த பிரச்சினைகள் வரும்போது உதாரணமாக, இருபத்து எட்டு நாட்களில் அடுத்த மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டால் என்ன செய்வது போன்ற பிரச்சினைகளுக்கு மார்க்கத் தீர்ப்பை வழங்கும் பொறுப்பு ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வழங்கலாம். ஆனால் இவ்வாறான பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுவதில்லை என்ற வகையில் அவர்கள் பிறைக்குழுவில் உள்ளடக்கப்பட வேண்டியதில்லை.
பிறைக்குழுவுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல் மற்றும் பிறைக்குழுவின் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தல் போன்றவற்றை முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் பொறுப்பேற்பது பொருத்தமாக அமையும். எதிர்வரும் காலங்களில் பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழேயே கொண்டுவரப்படும் என அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளமையும் வரவேற்கத்தக்கது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலும் ஜம்மியத்துல் உலமாவும் இல்லாத பிறைக்குழு என்பதை ஜீரணிப்பது பலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் நிதானமாகவும் ஆழமாகவும் சிந்தித்துப் பார்த்தால் இக்கருத்தின் நியாயம் புரியும்.
வேலையில்லாத நாய் பூனையை பிடித்து சிரைத்துக் கொண்டிருக்குமாம் என்பதை போல் சில வேலையற்றவர்கட்டு இன்னமும் இந்த பிறை விடயம் தீனி போட்டு கொண்டிருகின்றது போல் தெரியிறது. நாட்டில் எவ்வெளவோ பிரச்சினைகள் சமூகச் சீர்கேடுகள் இடம் பெறுகின்றன அவற்றைப் பற்றி பேசுவதற்கு சிந்திப்பதற்கு எவருக்கும் நேரம் கிடைப்படுல்லை. பெருநாள் முடிந்து நான்டு நாட்கள் கடந்து விட்டன இன்னும் பிறையை தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதற்கு வெட்கமில்லையா?
ReplyDeleteநல்ல ஒரு விஞ்ஞான கட்டுரை...அவ்வளவுதான் வானியலை படிக்காவிட்டால் உலமாக்கள் தரமற்றவர்கள் என்றால் அந்த வானியியல் கல்வி தேவையா? என்று நாம் முடிவெடுக்க கடமை பட்டுள்ளோம். மார்க்கத்தில் குறைவு நிலை ஒன்றை அல்லாஹ்வின் தூதர் விட்டு விட்டு சென்றுவிட்டார்கள் எல்லா உலமாக்களும் இந்த கோஸை முடிக்கவும்.
ReplyDeleteDon't fool the people in Sri Lanka
ReplyDeleteMore than 1000 years our forefathers
Fallow the salalfis.
Now you trying to get help from NASA .
be quite! 98%of Muslims in Sri Lanka
Following grand mosque only.
ஆக மொத்தத்தில் “ Think out of box” என்பது போல், மார்க்க அறிவு இல்லாதவர்களிடம் மார்க்கத்தின் முடிவுகளை தீர்மானிப்பதற்கு அனுமதி வழங்க முனைகின்றோம். அல்லாஹ்தான் இனி முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டும். முஸ்லிம் சமய கலாசார அமைச்சு அவர்களின் கடமையை செய்யும் லட்ஷணத்தை ஹஜ் விஷயத்திலும் ஈச்சம் பழத்திலும் பார்த்தோமே. இனி பிறையைத் தீர்மானிப்பதும் அவர்களிடமா? ஒருவனுக்கு எழுந்து நிற்பதற்கே பலமில்லையாம் ஆனால் ஏழு பொண்டாட்டி தேவையாம் என்பதுபோலுள்ளது. பிறைக்குழுவில் பிரச்சினைகள் இருப்பது என்னமோ உண்மைதான், அதனை நெறிப்படுத்தி நேர்படுத்தாமல், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்தும் கதையாய், தங்களின் சுய லாபத்திற்காய் சில கயவர்கள் அவர்களது நிகழ்சி நிரலில் வேலைசெய்கின்றனர் என்பதே உண்மை.
ReplyDelete'My comments', appears jobless, this is a very informative article and Shafraz has made some valid and valuable points. If you think this is a n old issue, why did you waste your time commenting about it. It appears, you are shameless guy without having the courage to reveal your TRUE NAME.
ReplyDelete
ReplyDelete>> பிறை என்பது வானியல் என்ற இயற்கை விஞ்ஞானப் பிரிவைச் சார்ந்த ஒரு விடயம். பிறைக்குழுவின் பொறுப்பு குறித்த தினத்தில் பிறை தென்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளனவா, பிறை தென்பட்டதை உறுதிப்படுத்தல் போன்றனவே. பிறை தென்பட்டதா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டால் மாதத்தின் ஆரம்பத்தைத் தீர்மானிப்பது எப்படி என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்த விடயம். பிறை குறித்த தினத்தில் தெரியுமா இல்லையா? தென்பட்டதாகச் சொல்லப்படுவது நம்பகமானதா இல்லையா? என்ற தீர்மானம் எடுப்பதற்குத் தேவையான அறிவு வானியல் பற்றிய அறிவே.
வானியல் சம்பந்தமாக ஆழ்ந்த அறிவில்லாதவர்களிடம் பிறை பற்றிய தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பைக் கொடுப்பதோ அல்லது அவர்களை இக்குழுவில் உள்ளடக்குவதிலோ எந்த அர்த்தமும் இல்லை.
உண்மையில் வானியலை முறையாகக் கற்காத இஸ்லாமிய அறிஞர்களும் இக்குழுவுக்குப் பொருத்தமற்றவர்கள் தான். காரணம், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இது விஞ்ஞானத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப் படவேண்டிய விடயம்.
இலங்கை ஒரு இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால் பிறை பற்றிய முடிவை அறிவிக்கும் பொறுப்பு இலங்கை வானிலை ஆய்வு மையத்திற்கே வழங்கப்பட்டிருக்கவேண்டும். அல்லது ஐக்கிய அமெரிக்கா இஸ்லாமிய நாடாக இருந்தால் இப்பொறுப்பு NASA வுக்கு வழங்கப் பட்டிருக்கவேண்டும்.<<
இது தான் இன்றைய பிரச்சினை : முக நூல் முல்லாக்களின் தீர்ப்பு, முதலில் இஸ்லாத்தை ஓரளவாவது கற்று அதன் பின்னர் இவ்வாறான விஷயத்தில் மூக்கை நுழைப்பதே நல்லது. உங்களது சொந்தக்கருத்தை இஸ்லாமியக்கருத்தாக பதிவு செய்ய உமக்கு என்ன அருகதை இருக்கின்றது? உமது சொந்தக்கருத்தை தெரிவிக்க இஸ்லாம் மார்க்கமென்ன உங்கள் வீட்டுச் சொத்தா?
மார்க்கம் என்பது உங்கள் அறிவு தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக இருந்தால், மஸஹு செய்கின்ற விஷயத்தில் மேல் பகுதியை விட கீழ் பகுதியையே மஸ்ஹு செய்வது ஏற்றமானதாக இருக்கும் என்று கூறிய அலி ரலியல்லாஹு அவர்கள் ஆனால் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மேல் பகுதியையே மஸ் ஹு செய்யக்கண்டேன் என்று சொன்னார்கள். எனவே உங்கள் புத்தி சொல்லுகின்றவற்றைக் கொண்டு மார்க்கத்தில் மாற்றம் கொண்டுவந்தால் கிரீஸ்த்தவர்களிடம் இருப்பது போல் பழைய ஏற்பாடு புதிய எற்பாடு என்று பல்வேறு எற்பாடுகளும் சட்டங்களும் நலிந்து விடும்.
>> இலங்கை ஒரு இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால் பிறை பற்றிய முடிவை அறிவிக்கும் பொறுப்பு இலங்கை வானிலை ஆய்வு மையத்திற்கே வழங்கப்பட்டிருக்கவேண்டும். அல்லது ஐக்கிய அமெரிக்கா இஸ்லாமிய நாடாக இருந்தால் இப்பொறுப்பு NASA வுக்கு வழங்கப் பட்டிருக்கவேண்டும்.<<
எந்த இஸ்லாமிய நாட்டில் வானிலை ஆய்வு மையத்திற்கு பிறையை அறிவிக்கும் அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளதென்று கூறமுடியுமா? நீங்களாக ஒன்றைக் கற்பனை பண்ணி கதை அளக்க வேண்டாம். அரை வேட்காடுகளால்தான் சமுகத்தில் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.
கட்டுரையாளர் சொல்லி இருப்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். எனது புரிதலின் படி பிறை விடையத்தைக் கையாள்வதற்கு உலமாக்களை விட வானியல் கற்றவர்கள் பொருத்தமானவர் என்கிறார். உலமாக்களை வானியல் கற்கச் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. கட்டுரையாளர் வித்தியாசமான கோணத்தில் தீர்வு காண முயற்சித்திருக்கிறார். அக்கருத்துடன் நான் உடன்பட்டாலும் அதற்கு உலமாசபையும் கொழும்பு பெரிய பள்ளியும் உடன் படுமா என்பது தான் பிரச்சனை.
ReplyDeleteவேலையில்லா நாய் அல்ல வேலையில்லா நாவிதன், நாவிதன் என்றால் முடி வெட்டுபவர்.
ReplyDeleteம்டத்தனமான கருத்துக்களை பதிவிடும் பச்சைமடையரகளே இஸ்லாம் என்னடா உங்க வாப்பா உம்மா வீட்டு ்சொத்தா அல்லாஹ்வுக்கும் நபி ஸல் அவரகளுக்கும் புத்தி சொல்வதற்காடா புறப்பட்டு விட்டீர்கள் இஸ்லாத்தை இஸ்லாத்தை விளங்காத நாய்களே நபி ஸல் அவர்கள் சொல்லாத விடயங்களை சொல்கின்றீர்கள்.நபி ஸல் அவர்கள் காலத்தில் எத்தனை பேருடா விஞ்ஞானிகள்.கயவர்களே உங்கள் விரல்களை அல்லாஹ் சொத்தி ஆக்கி விடுவனாக உங்களைப் போன்றோர்களை புத்தி பேதலிக்க செய்து பைத்தியமாக்கி விடுவானாக.இஸ்லாத்தை இப்படி கூறு போட பார்க்கின்றீர்களே.நாலு எழுத்துக்களை படித்துவிட்டால் நினைத்த மாதிரி எழுதலாம் என்று நினைத்து விட்டீர்களா.அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கடா அயோக்கியர்களே.நாய்க்கு இரும்பு கடையில் என்ன வேலை அவரவர் வேலயை அவரவர்தான் செய்ய வேண்டும்.சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்குவது கொலை செய்வதை விட கொடூரமானது.நபி ஸல் அவர்களின் சுன்னத்துகளை கொலை செய்து கொண்டு இஸ்லாம் பேசும் கூட்டம் எகூதி களின் ஏஜன்டுகள் உங்களுக்கு அழுவும் நாசமும் காத்துக்கொண்டிருக்கு be careful.
ReplyDelete