பிறைபார்த்து தீர்மானிக்கும், அதிகாரம் யாரிடமிருக்கிறது...? சட்டத்தரணி சறூக்
கொழும்பு பெரிய பள்ளியின்பிறைத்தீர்மானம் இலங்கை முஸ்லீம்களை மூன்று பிரிவுகளாக்கி பெருநாளை கொண்டாட வைத்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது.
14 திகதி வெற்றுக்கண்ணால் பிறைபார்த்ததை ஆதாரமாகக் கொண்டவர்கள் மறுநாள்(15) பெருநாள் கொண்டாடினர்,வானிலை அவதான நிலையத்தின் சாத்தியக்கூறின் அடிப்படையில் "பிறை தென்படவில்லை பார்த்தவர்கள் பொய் கூறுகிறார்கள் "எனும் அடிப்படையில் பலர் 15 ல் நோன்பு பிடித்து 16ல் பெருநாள் கொண்டாடினர். எல்லாவற்றிலும் இரண்டாங்கெட்ட நிலை இருப்பது போன்று இதிலும் இரண்டாங்கெட்ட நிலையிலுள்ளவர்கள் 15ம் திகதி நோன்பு பிடிக்காது பெருநாளும் கொண்டாடாது 16 ல் பெருநாள் கொண்டாடினர்.
பிறைபார்த்தல் விடயத்தைத் தீர்மானிப்பவர்களாக முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம்,அகில இலங்கை ஜம்யத்துல் உலமா மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பனவற்றை ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களால் ஏற்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டிருப்பனையும நாம் அறிவோம்.
மேற்கூறப்பட்ட அமைப்புகளுக்கு சட்டரீதியாக பிறை பார்க்கும் அதிகாரத்தை மக்களால் பாராளுமன்ற சட்டத்தினூடாக வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை தகுந்த சட்டங்களின் துணையுடன் பொதுமக்களுக்கு விளங்கப்படுத்துவதனூடாக அல்லாஹ் என்மீது சுமத்தியுள்ள அமானிதத்தை இத்தால் நிறைவேற்றுகிறேன்.
இதோ அந்தச்சட்டங்கள்
1. 1956 ஆண்டின் 51 ம் இலக்க முஸ்லிம் பள்ளிவாசல்கள் தரும நம்பிக்கைப்பொறுப்பு அல்லது வக்புகள் கட்டளைச்சட்டம்.(Wakfs Act)
=============================முஸ்லிம் கலாச்சார திணைக்களம் மேற்கூறப்பட்டசட்டத்தின் படி பள்ளிவாயல்கள் மற்றும் புண்ணிய தலங்களை பதிவு செய்தல், அவற்றுக்கான நம்பிக்கையாளர் சபைகளை தெரிவு செய்தல்,அதில் பிணக்குகள் வந்தால் அதனை வக்புசபையினூடாக தீர்த்தல் முடியாவிட்டால் வக்பு நியாயசபையினூடாக தீர்த்தல் மற்றும் அதற்கான பணியாட் தொகுதியை வேலைக்கமர்த்தல் என்பவற்றுடன் பள்ளிவாசல்களுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரித்தல் ,அவற்றின் உறுதி ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் கணக்கு வழக்குகளை ஆராய்தல் என்பன போன்ற காரியங்களை செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
எனவே மேற்கூறப்பட்ட சட்டத்தின் படி பிறை சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு எந்த அதிகாரமும் இந்த விடயத்திற்குபொறுப்பான அமைச்சுக்கோ திணைக்களத்துக்கோ வழங்கப்படவில்லை.
2. 2000ம் ஆண்டின் 51ம் இலக்க கூட்டிணைக்கப்பட்ட அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சட்டம்.
============================
மேற்கூறப்பட்ட சட்டத்தின் பிரிவு 3ன் படி
"தீனுல் இஸ்லாம்" எனும் இஸ்லாமிய சித்தாந்தத்தை ஊக்குவித்தலும் பாதுகாத்தலும்
முஸ்லிம் சமுகங்களிடையேயும் மார்க்க அறிஞர்களுக்கிடையில் ஐக்கியத்தை ஊக்குவித்தலும் வளர்த்தலும்
இஸ்லாத்திற்கிணங்க முஸ்லிம்களின் சமூக கலாச்சார பொருளாதார நலன்களை வளர்த்தல்.
ஜும்மா த்தொழுகை ஒழுங்கு படுத்தல்
முஸ்லீம்களுக்கும்முஸ்லிமல்லாதவரகளுக்கு இஸ்லாத்தை விளங்கப்படுத்த பத்திரிகைகள் சஞ்சிகைகள் புத்தகங்களை முன்மொழிகளிலும் வெளியிடுதல்.
அறபு மொழி கற்கையை ஊக்குவித்தல்.
சமூகங்களுக்கிடையே ஒத்துமையை ஏற்படுத்தல்.
மாவட்டங்கள் தோரும் கிளைகளை உருவாக்குதல்.
மேற்கூறப்பட்ட நோக்கத்தை அடைவதற்கான தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
எனவே இவர்களுக்கும் பிறை தொடர்பான முடிவெடுக்க முடியாது.
3.1986ம் ஆண்டின் 22ம் இலக்க கூட்டிணைக்கப்பட்ட கொழும்பு பெரிய பள்ளிவாயல் சட்டம்.
========================
மேற்கூறப்பட்ட சட்டத்தின் 3ம் பிரிவின் படி
வணக்க மற்றும் கலாச்சார நோக்குக்காக கட்டடங்களை நிர்மானித்தல்,
பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல்.
பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடிகளையும் புனித தளங்களையும் பழுது பார்த்தலும் பராமரித்தலும்.
கல்விவளர்ச்சிக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தல்.
பசிபோக்குதல்,நோயாளிகளுக்கு உதவுதல், உடையற்றவர்களுக்குஉடைவழங்குதல்,வீடற்றவர்களுக்கு வீடுகட்ட உதவுதல்.
ஷக்காத் சதகாக்களை வசூலிப்பதும் பங்கிடுவதும்.
மேற்கூறப்பட்டவைகளே கொழும்பு பெரிய பள்ளிவாயல் நிர்வாகத்தினரின் பிரதான நோக்கங்களாகும்.
எனவே இவர்களுக்கும் பிறை தீர்மானிக்கும் அதிகாரமில்லை.
அத்துடன் மேற்கூறப்பட்ட 2ம் மற்றும் 3ம் சட்டங்களின் 10ம் பிரிவின் படி மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் குடியரசின் , ஏனைய அமைப்புக்களின் அல்லது மற்றவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
பிறையை தீர்மானிக்கும் விடயமானது ஒரு சட்டத்தினால் கட்டுப்படுத்தாமையையே கடந்த கால அமலிதுமலிகளுக்கு காரணமாகும்.
இதை தவிர்ப்பதற்கு நான் முன்வைக்கும் சிபார்சுகள்.
===================
தற்போது எமது முஸ்லிம்தனியார் சட்டத்திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
இத்தருவாயில் திருத்தற்குழுவின் கவனதிற்கு பின்வரும் விடயங்களை கொண்டுவரவேண்டும்.
எவ்வொரு பிரதேசத்திலிருக்கும் ஹாதி(quazi)மார்களுக்கும் பிறை பார்க்கும் அதிகாரத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டைச்செய்து அவர்களின் பெரும்பான்மையானவர்களின் முடிவை வைத்து கொழும்பிலிருக்கும் ஹாதிகள் (Board of quazi )சபையானது பிறை தொடர்பான இறுதி முடிவை எடுக்க வழிவகை செய்வதுடன்,
இவர்களின் தீர்மானங்களில் தலையிடுபவர்களுக்கு சிறைத்தண்டணை அல்லது தண்டப்பண அறவீட்டை செய்வதனூடாக சுதந்திரமான பிறை தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்.
எனக்குதெரிந்த சட்ட அறிவை உங்களுடன் பகிருகிறேன்.எனது கருத்திற்கு முரணாக வழக்குத்தீர்ப்புகள் அல்லது சுற்ற றிக்கைகள் ஏதாவது இருந்தால் எனது மேற்கூறப்பட்ட கருத்துக்களை மீழப்பெற தயாராகயிருக்கிறேன்.
தேசத்துக்குள் சிக்கல்கள் இல்லாது இருப்பதற்கு சிறந்த கருத்துக்கள்தாம் இவை.
ReplyDeleteஆனால், இஸ்லாமிய போதனைகளின் படி முஸ்லிம்களின் ஐக்கியம், இன்ப துன்பங்கள், பரஸ்பர ஒத்துழைப்புகள், வணக்க வழிபாடுகள் போன்றன இந்த செயற்கையான பிரதேச/நாட்டு எல்லைகளைக் கடந்த பூகோள சகோதர உணர்வுகளால் பிணைக்கப்பட்டவை.
எனவே, எமது எல்லைகளைக் கடந்தும் பார்க்கப்படும் பிறைகள் எமக்கும் செல்லுபடியானதாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தவறு இருக்க முடியாது.
உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்களாக நாம் வாழ்ந்தாலும் மொழி, நிற, பிரதேச ம் போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரே சமுதாயமாகவே வாழ்கிறோம்.
சட்டத்தரணி ஸரூக் அவர்கள் சுட்டிக்காட்டும் காதிகள் (Quazi) போன்றவர்களால் பார்க்கப்படும் பிறை இதர நாடுகளில் பார்க்கப்பட்டாலும்கூட அவை நமக்காகவும்தான் என்ற சர்வதேச அங்கீகாரத்தை நமக்குப் பெற்றுத் தர வேண்டும்.
அப்போதுதான், நாம் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து ஐக்கியமான உலகளாவிய ஒரே முஸ்லிம் உம்மத்தாக - சமுதாயமாக வாழ அது உதவும்.
"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்".
(அல்குர்ஆன் : 3:103)
www.tamililquran.com
ஒரே மறை; ஒரே பிறை - ஒற்றுமை.
I am sure there are few Qazi who have good Islamic background knowledge. But I m sad to say that mojoroty of the Qazi are not even specialized in sareea rules of marriage or divorce issues. fit her many do not go to five time jamaat prayers. so please retrieve this sujjestion .. unless the Qazi matters itself is double checked.
ReplyDeleteAllah knows the best.
சர்தேச பிறை என்றால் ஏன் துருக்கி கண்ட பிறையை சவூதி சரவதேச பிறையாக ஏற்றுக்கொள்ளவில்லை.ஆகவே எமது நாட்டுக்கு தென்படும் பிறையை சாட்சியமானது.
ReplyDeleteசர்தேச பிறை என்றால் ஏன் துருக்கி கண்ட பிறையை சவூதி சரவதேச பிறையாக ஏற்றுக்கொள்ளவில்லை.ஆகவே எமது நாட்டுக்கு தென்படும் பிறையை சாட்சியமானது.
ReplyDeleteMasha allah ..!!!
ReplyDeleteI've seen how genuine so called qazi's are..I'd rather go with the present committee
ReplyDeleteதாங்கள் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு பிறைத்தீர்மானத்தின் அடிப்படையில் காதிமார்களின் அதிகார எல்லைக்குள் பிறைபார்க்கப்பட்டு முடிவெடுக்கவேண்டும் எனவும், சர்வதேச பிறை தகவல்களைப் பெறுதல் மற்றும் அமுல்படுத்தல் போன்ற முறயற்சிகள் மறுக்கப்படவேண்டும் எனவும் கூறுவதற்கு முயல்கின்றீர்கள் என்பதும் வெளிப்படை. மேலும் அவர்கள் சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் வழங்கி தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் உங்கள் கருத்து அப்படித்தானே?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteChanging pillow for headache?
ReplyDeletePlease try to understand that 98% of Muslims in Sri Lanka
Not except other than grand mosque decision for eid and
Other moon sighting issues.
If you can't obey try to change the pillow you're headache is
with yourself.
This comment has been removed by the author.
ReplyDelete(இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன். பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்துசேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது “நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்” என்று பதிலளித்தேன். அவர்கள், “நீயே அதைக் கண்டாயா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்” என்று சொன்னார்கள். அதற்கு நான், “முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கு, “இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் 1983 அத்தியாயம் : 13. நோன்பு
ReplyDeleteசர்வதேச பிறையாம்....
முதலில் ஷரீஅத்தை தெளிவாகப் படியுங்கள்...
அப்புறம் astronomy யும் பூகோளவியலும் படியுங்கள்
Kiribati க்கும் Samoa வுக்கும் 25 மணி 10 நிமிட நேர வித்தியாசம் உண்டு.
எப்படி ஒரே நாளில் பெருநாள் வரலாம்