Header Ads



இரவுநேரத்தில் இலங்கைக்கு வரும், தமிழ்நாட்டு வெளவால்கள்

தமிழகம் கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து இரவோடு இரவாக அதிகளவான வெளவால்கள் இலங்கைக்கு வந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திகளில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கைக்கு பறந்து சென்று பழங்களை தின்று திரும்பும் பழந்தின்னி வெளவால்கள் கோடியக்கரை சரணாலயத்தில் அதிகளவில் காணப்படுவதாக வன உயிரி ஆர்வலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் பழந்தின்னி வெளவால்கள் பெருமளவில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வகை பழந்தின்னி வெளவால்கள் சூரிய மறைவுக்குப்பிறகு கோடியக்கரையிலிருந்து புறப்பட்டு இலங்கை சென்று, அங்கிருக்கும் மரங்களில் பழங்களைத்தின்றுவிட்டு, இரவே தங்களது இருப்பிடத்திற்கு வந்துவிடுவதாகத் தெரிகிறது.

எலி போன்ற சிறு முகத்துடன் காணப்படும் இந்த வெளவால்களைக் காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கு சில பறவைகள் கோடியக்கரையிலிருந்து மேற்கு நோக்கி பறந்து தஞ்சை பகுதிக்கு செல்வதாகவும், பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.