அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது - மகிந்த
அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது பற்றி, அதுல் கெசாப்புடனான சந்திப்பின் போது, எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.
அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது. சிறிலங்காவை விட்டு வெளியேறும் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றது” என்றும் கூறியுள்ளார்.
பேசினால் உண்மையே பேசும் மாகான் அவர்களின் இந்த உண்மையையும் வாசியுங்கள். யாரை யார் மடையனாக்கின்றான் என்பதை இந்த நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் எருமைமாட்டு மூளைகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த மண்ணில் உண்மையின் அடுத்தபக்கம் தான் நன்றாக எல்லோருக்கும் தெரியும். அதைத்தான் அல்குர்ஆன்' அவர்களுக்கு உள்ளங்கள் இருந்தும் அவற்றால் சிந்திப்பதில்லை எனவும் கண்கள் இருந்தும் அவற்றால் பார்ப்பதில்லை எனவும் அவர்களுக்கு காதுகள் இருந்தும் அவற்றால் கேட்பதில்லை எனவும் அல்குர்ஆன் மிகவும் தௌிவாகக் கூறுவது இந்த நாட்டில் வாழும் இன,மத வேறுபாடின்றி பலருக்கும் பொருந்தும்.
ReplyDelete