Header Ads



ஞானசாரருக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவாரா..? அரசியல் வாதிகளும் கவலை

6 மாத கால கடூளிய சிறை தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஞானசார  தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரபலங்கள் சிலர் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள நிலையில் பௌத்த அமைப்புகள் சிலவும் அவருக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியுள்ளன.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு ராவன பலய அமைப்பு மற்றும் முறுத்தொட்டுவே ஆனந்த சாகர தேரர் கடிதம் மூலம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஞானசார தேரருக்கு நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தொடர்பில் தான் மனவேதனை அடைவதால அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டார். ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பில்  கருத்து வெளியிட்ட அவர் ,

சில விடயங்களை மிகவும் ஆக்ரோஷமாக அவர் கையாண்டாலும் அவரது நற்குணங்கள் தொடர்பில் தான் நன்கறிவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

2

ஞானசார தேரருக்கு விரைவில் பிணை வழங்கப்படும் என தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

இன்று  வெலிகடை சிறைச்சாலைக்கு ஞானசார தேரரை சந்திக்க சென்ற அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாராயினும் ஞானசார தேரர் தயாசிறி ஜயசேகரவை  சந்திக்க மறுப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

2 comments:

  1. வழங்கினாலும் ஏன் என்று கேற்க எந்த நாதியும் இல்லை.

    ReplyDelete
  2. இனி அரசில் பதுங்கியிருக்கும் துவேசங்கள் ஒவ்வொன்றாக வௌிப்படும். முதல் துவேசம் வௌியாகியிருக்கின்றது. இனி படிப்படியாகத் தொடரும்.

    ReplyDelete

Powered by Blogger.