ரணிலை வீட்டுக்கு அனுப்புமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காதது குறித்து ஜனாதிபதியே பொறுப்புக் கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி விட்டு நாட்டுக்கு வேலை செய்யக் கூடிய ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
தற்போதைய அரசாங்கம் நாட்டுக்கு எந்த வேலைகளையும் செய்யவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
இதற்கு தற்போதைய ஜனாதிபதி பொறுப்புக் கூறவேண்டும். ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்காத காரணத்திற்காவே ஜனாதிபதி பொறுப்புக் வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் போது மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்தால், இனவாதிகள் மகிந்த ராஜபக்சவை நெருங்க முடியாது போகும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment