Header Ads



"பிறை குழப்பம்" நடவடிக்கைக்கு தயாராகிறது முஸ்லிம் சமய விவகார திணைக்களம்

பிறை விவகாரத்தில் முஸ்லிம சமய விவகார திணைக்களம் எதிர்வரும் காலங்களில் கூடிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள இருப்பதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு, இதுபற்றி அமைச்சர் ஹலீம் கூறியதாவது,

பிறை விவகாரத்தில் நாட்டு முஸ்லிம்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு முகம்கொடுத்திருப்பதை உணரமுடிகிறது. அந்தவகையில் நடந்த விசயங்கள் பற்றி ஆராய்ந்து, எதிர்வரும் காலங்களில் இதுபற்றிய குழப்பங்களை தவிர்ப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம்.

பிரேத பரிசோதனை செய்வது போன்று, நடந்துமுடிந்த குழப்பங்கள் தொடர்பில் எமது செயற்பாடுகள் தொடரும், தேவைப்படுமிடத்து பிறை கண்டவர்களை அழைத்து வாக்குமூலம் பெறவும் திட்டமிட்டுள்ளோம்.

இன்னும் சில யோசனைகளும் எம்முன் உள்ளன. பிறை தொடர்பில் அவற்றை நடைமுறைப்படுத்தி குழப்பங்கள், அமைதியின்மை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

4 comments:

  1. Appoint an independent group for this.
    Take that power from ACJU and Colombo mosque .
    ..
    Appoint some capable people..with good people with experience in religious education and other fields...
    No group should have monopoly ...
    Take way it from monopoly of any groups .
    Make this committee free from group culture

    ReplyDelete
  2. அப்படி என்றால் சரியோ ்பிழையோ தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்தினால் அதை ஏற்றுக் கொள்வீர்களோ? ஒரு சில குழப்ப வாதிகளை தவிர மற்ற அனைத்து முஸ்லிம் களும் acju விடயத்தில் தெளிவாகவே இருக்கின்றோம்.உனக்கு முஸ்லிம் அமைச்சு தந்த்தால் நீ உலமாவோ முப்தி அல்ல என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளும்.அதற்கு ஏற்ற முறையில் நடவடிக்கை மேற் கொள்ளவும்.பொய்யர்களின் சத்தியம் நாசம்.

    ReplyDelete
  3. It is very simplez to stop this crescent problem. it is implemented all Arab countries.
    1. Looking crescent is not a public people work, only authorised government staff will do it.
    2. There is no contact numbers for crescent committee.
    3.If any group of people celebrate befor or after government declared Eid day, will be punished 10 years in jail

    ReplyDelete

Powered by Blogger.