ரமழானில் நற்பேறுபெற்ற கூட்டதில், அல்லாஹ் எம் அனைவரையும் சேர்ப்பானாக...
ஷவ்வால் மாத தலைப் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சையானது ரமழான் தந்த உன்னதமான ஆன்மீக மற்றும் பண்பாட்டு மாற்றங்களை கழுவிச் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வானத்தில் தோன்றும் அல்லது தோன்றாத பிறைக்காக...
முழு மாதம் பகல் காலங்களில் நா வரண்டு போக, தாகித்திருந்து
வயிறு எக்கிப்போக பசித்திருந்து
கால் கடுக்கவும் இடுப்பு நோகவும் நின்று வணங்கி விட்டு
பிறை விவாகரத்துக்காக நாவை கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்துவதா?
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையூடாக வரும் அறிவிப்பை மட்டும் எற்று அதன் படி செயல்படுவோம்.
பிறையைத் தீர்மானிப்பதில் உலமாக்களும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏதும் தவறு செய்தால் அவர்களை அல்லாஹ் கவனித்துக் கொள்வான்.
அவர்கள் பிறை சம்பந்தமான ஆய்வில் 'இஹ்லாஸ்' உடன்,தம்மால் செய்ய முடியுமான உச்ச கட்ட, உளப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்ட பின்பும் முடிவில் தவறு இடம் பெற்றிருந்தால் அவர்களை மன்னிப்பதுடன் நற்கூலியும் வழங்குவான்.
அவர்களைப் பற்றி நாம் கன்னாபின்னா என்று பேசுவதனால் எமது நன்மைகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டி வரும்.அவர்கள் கேட்காமலேயே அவர்களது வங்கிக் கணக்கில் நாம் வைப்பிலிட்ட கதையாக மாறும்.
ரமழான் மாதம் அமல்களுக்காக முண்டியடிக்கும் மாதமேயன்றி குதர்க்கத்துக்கும் புறம் பேசுவதற்குமா காலமல்ல.
பிறை பற்றி கட்டாயமாக நாம் பேச வேண்டும். ஆனால் அறிவுடனும் பண்பாடாகவும் இக்லாசோடும் மட்டுமே பேசவேண்டும்.ஆய்வும் ஆராய்ச்சியும் மிகைக்க வேண்டும்.
பிறை விவவகாரம் தொடர்பான ஆழமான ஆய்வுகளை எதிர் காலத்தில் செய்ய வேண்டி இருக்கிறது.
பிறை விவகாரத்தைப் பற்றி ரமழான் ஆரம்பிக்க ஓரிரு நாட்களுக்கு முன்னரும் ஷவ்வால் ஆரம்பிக்க ஓரிரு நாட்களுக்கு முன்னரும் மட்டுமே விவாதிக்கின்ற பழக்கத்தை நாம்கொண்டுருக்கிற வரை இப்பிரச்சினை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
'சோடா கேGஸ்' போன்று உணர்ச்சிகளின் சமூகமாக இல்லாமல் அறிவினதும் ஆராய்ச்சியினதும் சமூகமாக நாம் மாற வேண்டும்.
பிறை விவகாரம் பற்றி பேசும் எவரிடமும்:-
1.சத்தியத்தை கண்டறிய வேண்டும் என்ற தீராத வேட்கை,
2.அல்லாஹ்வை மட்டுமே திருப்திப்படுத்த வேண்டும் என்ற இக்லாஸ்,
3.பிறை விவகாரம் தொடர்பாக பழைய கால நவீன கால உலமாக்களது கருத்துக்கள் பற்றிய தெளிந்த அறிவு,
4.தற்காலத்தில் அது தொடர்பாக உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பற்றிய ஞானம்
போன்றன அவசியமாகும்.
ரமழானிலிருந்து வெளிவரும் போது அதன் நற்பேறுகளைப் பெற்றவர்களது கூட்டதில் அல்லாஹ் எம் அனைவரையும் சேர்ப்பானாக!
அஷ்ஷெய்க் எஸ்.எம்.பளீல்
Post a Comment