Header Ads



கோத்தா, பசிலிடையே போர் மூண்டது, இருவரிலும் நாமலுக்கு விருப்பமில்லை

எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஒன்றிணைந்த எதிரணி சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், அவ்வெதிரணிக்கும் பனிப்போரொன்று மூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராகப் பலவந்தமாகப் போட்டியிடப் பார்ப்பதுடன் மறுபுறம், பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் பலவந்தமாகப் போட்டியிடப் பார்க்கிறாரென, பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ எம்.பி, மேற்படி இருவரையும் நிறுத்துவதில் விருப்பமின்றி உள்ளாரென்றும், பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் ஒன்றிணைந்த எதிரணியினருக்கும் இடையில், தற்போது பனிப்போரொன்று மூண்டுள்ளதாகக் குறிப்பிட்ட நலின் பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி, ஒரு காலமும், இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் அமைதியின்மை தோன்றும் ​வகையில் செயற்படவில்லை என்றுச் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.