"தமிழரும், முஸ்லிம்களும் அப்பத்தைப் பிரிக்க, குரங்குகள் தேவை இல்லை.."
-நடிகர்-கவிஞர் ஜெயபாலன்-
நான் கவலைப்பட்டதுபோல கிழக்கு மாகாணத்தில் பதட்டம் அதிகரித்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு நகர வட்டாரங்களில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் காணி விற்றல் வாங்கல் தொடர்பாக பதட்டநிலை உருவாகிவருகிறது. முஸ்லிம்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆய்வுகளில் இருந்து ஒதுங்கிவிட்டாலும் துர் அதிஸ்ட்ட வசமான சூழலில் சில வார்தைகள் சொல்லவேண்டுமென நினைக்கிறேன்.
.
யழ்ப்பாணம் முல்லைதீவு மாவட்டங்களில் முஸ்லிம்கள் காணிகளை தமிழரும் கிழக்கில் தமிழர் காணிகளை முஸ்லிம்களும் வாங்கும் போக்கு பொதுவாக அதிகரித்து வருகிறது. . வடக்கில் முஸ்லிம்கள் தமது காணிகளை தமிழருக்கு விற்க்க வேண்டாமென நான் எழுதியும் கோரிக்கை வைத்துமிருக்கிறேன். பாரம்பரிய நிலம் தொடர்பாகவோ அல்லது ஏற்கனவே விற்க்கப்பட்ட தனியார் நிலம் தொடர்பாகவோ தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே காணிப் பிரச்சினைகள் எழுந்தால் அவை நீதிமன்றத்தில் மட்டுமே தீர்துகொள்ளப்பட வேண்டுமென நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறேன்.
ஏற்கனவே தமிழரிடமிருந்து வாங்கிய நிலத்திற்க்கு வேலிபோடச் சென்ற முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். கண்டனத்துக்குரிய இச்சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது.
உலகில் ஒரே பிரதேசத்தில் இரண்டு அல்லது அதிக இனங்கள் வாழும் நாடுகளில் -உதாரணத்துக்கு வட அயர்லாந்து போன்ற இடங்களில் எல்லாம் இத்தகைய பிரச்சினைகள் உள்ளது.
அண்மைக் காலங்களில் பொதுபலசேன போன்ற அமைப்புகள் இனங்களுக்கிடையிலான மாறுபட்ட குடிசன வளர்சி நிலம் கைமாறுதல் போன்ற அச்சங்களை முன்னிலைப்படுத்தி தமிழர் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இது ஆபத்தான போக்காகும்.
வட அயர்லாந்து போன்ற பல்லின தேசங்களில் இத்தகைய அச்சங்கள் தீர்த்து வைக்கபட்டுள்ளது. மாறுபட்ட குடித்தொகை வளர்ச்சிப் பின்னணியில் நில உரிமைப் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் அதிகார பகிர்வு பிரச்சினைகள் தொடர்பாக புரட்டஸ்தாந்து (ஸ்கொட்டிஸ்) மற்றும் கத்தோலிக்க (ஐரிஸ்) இனங்களின் மத்தியில் அனுபவரீதியாக நிறைய ஆய்வறிவும் விதிகளும் நவீன தீர்வுகளும் எட்டப்படுள்ளன.
வடகிழக்கில் வாழும் தமிழரும் முஸ்லிம்களும் வட அயர்லாந்துபோன்ற நாடுகளின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
தமிழரும் முஸ்லிம்களும் விற்று வாங்கும் காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நீதிமன்றமும் பேச்சுவார்த்தை அரங்கும் சிவில் சமூகங்களின் சந்திப்புகளும் பத்திரீகைகளும், உள்ளது. இவற்றின் மூலம் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். யாரும் வன்முறையில் ஈடுபடுவது அனுமதிக்கப்படக்கூடாது.
தமிழரும் முஸ்லிம்களும் அப்பத்தைப் பிரிக்க குரங்குகள் யாரும் நமக்குத் தேவை இல்லை.
Post a Comment