புதிய பிறைக்குழு அமைக்க வேண்டும் - வலுக்கிறது கோரிக்கை
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் இம்முறை ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து பிறைக் குழுவை மறுசீரமைக்குமாறு பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் கீழியங்கும் தற்போதுள்ள பிறைக்குழுவை கலைத்துவிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழியங்கும்வகையிலான அரச அங்கீகாரம் பெற்ற புதிய தேசிய பிறைக்குழுவொன்றை தாபிக்குமாறும் குறித்த கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கொண்டுள்ள ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்றும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்படி விடயங்களை உள்ளடக்கி முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கு கடந்த மூன்று தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த மின்னஞ்சல்களை முஸ்லிம் கல்விமான்கள், உயரதிகாரிகள், உலமாக்கள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அனுப்பி வைத்துள்ளனர்.
இஸ்லாத்தை தூய்மையான வடிவத்தில் பின்பற்றவும் .... சிர்க், பித்அத்திற்கு துணைபோகும் உலமாக்களிடமிருந்து பாதுகாத்திடவும் அல்லாஹ் இலங்கை முஸ்லிம்களான எங்களுக்கு உதவிசெய்வானாக.
ReplyDeleteமுஸ்லீம் விவகார அமைச்சு என்பது ஒரு சிங்கள அரசாங்கத்துக்குள் ( சட்டம் ஒழுங்கை சரியாக நிறைவேற்றாத அரசாங்கம், அதை தட்டிக் கேட்க வக்கில்லாத அமைச்சர்கள், அரசியல் வியாபாரிகள். முதுகெலும்பில்லாதவர்கள் ) இருக்கும் ஒரு அமைச்சு இதில் 100% சிங்களவர்களே அதிகாரம் செலுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. இது தன் கையால் தனக்கே சூனியம் செய்வது போல் இருக்கிறது. இது ஒரு மடத்தனமான சிந்தனையாகும். முஸ்லிம்களின் மார்க்க நிர்வாக சபையும் அதன் தலைமைத்துவம்தான் இதை தீர்மானிக்கும். முடிந்தால் அந்த மார்க்க நிர்வாக சபையையும், தலைமைத்துவத்தையும் சீர்படுத்துங்கள்.
ReplyDelete