"நான் ஒன்றும் பேஸ்புக், முப்தி கிடையாது..."
மார்க்கத்தில் மாற்றம் கொண்டு வரவோ தீர்ப்பு வழங்கவோ தீர்ப்பாளர்களை கேள்விக்குட்படுத்தவோ நான் ஒன்றும் மார்க்கத்தில் உச்சம் தொட்டவன் அல்ல. மார்க்கம் கற்பதில் இன்று வரை ஒரு மாணவனாகவே உள்ளேன். ஒரு மொபைலும் தமிழ் டைப்பிங்கும் இருந்தால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற மனப்போக்கு எனக்கில்லை. எனக்கு அல்லாஹ் தந்த இந்த சொற்ப அறிவின் பிரகாரம் என் மனதில் பட்ட சில விடயங்களை சொல்கிறேன் அது பிழையாக இருந்தால் அல்லாஹ் மன்னிப்பானாக. சரியாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்.
பிறை விடயத்தில் 11 மாதங்கள் உலமா சபையை ஏற்கும் நாம் ஒரே ஒரு மாதம் மட்டும் அதனை மிகவும் கேவலப்படுத்துகிறோம்.அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அப்படியானால் இவ்வளவு காலமும் உலமா சபையின் பிழையை ஏற்ற நாம் பாவிகளாவோம் அல்லது ஒரு மாதம் மட்டும் நிராகரிப்பதாலும் பாவிகளாவோம்.
கண்ட பிறையை ஏன் மறுத்தார்கள் தெரியவில்லை. அவர்கள் மக்களுக்கு கூறிய காரணத்தை மக்கள் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். அல்லாஹ்வே நீதியாளன்.அவனே அனைத்தையும் அறிந்தவன்.
ஒவ்வொரு நோன்புக்கும் பெருநாளைக்கும் இதே பிரச்சினை என்றால் கண்ணியத்துக்குறிய உலமா சபை தங்களது நிலைப்பாடுகளை ஏனைய உலக இஸ்லாமிய அறிஞர்களோடு கலந்துரையாடி மீள் பரிசீலனை செய்து கொள்வது சிறந்தது.
சிலர் நோன்பு,சிலர் நோன்பு இல்லை, சிலர் பெருநாள் கொண்டாடுகிறார்கள். இது நபியவர்கள் காட்டித்தந்த வழி முறை தானா தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு நியாயத்தை வைத்து விவாதிக்கும் போது என்னைப் போன்ற பாமரன்கள் தான் குழம்பிப்போய் நிற்பது.
இன்று முகநூல் பத்வா கொடுக்கும் அனைவரும் தங்களை ஒரு முறை மீள் பரிசீலனை செய்து கொள்வது நல்லது. காரணம் எனக்கு தெரிந்து சிலர் மார்க்க விஷயத்தில் பூச்சியம். நான் இன்று நோன்பு நோற்றுள்ளேன். அது நன்மையாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ். பாவமாக இருந்தால் என்னையும் என்னைப் போன்ற மக்களை வழி நடாத்தும் சபையும் அல்லாஹ்விடம் பதில் சொல்லட்டும்.
உங்களுக்கு சிந்தனை இல்லையா என்ற கேள்விகள் கேட்டு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். நான் இன்னும் மார்க்கம் கற்பதில் மாணவன் தான் முப்தி அல்ல.
Asaam A Careem
Asaam A Careem
You are absolutely right
ReplyDeleteஇந்தமாதிரி செய்திகளைப் பிரசுரித்தி வாசகர்களின் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என பொறுப்பாளர்களின் பணிவாக வேண்டிக் கொள்கிறேன். இது அவரவர் அவர்களுடைய முகநூல் அல்லது வேறு ஏதாவது வகையில் அவர்கள் பிரசுரிக்கட்டும்.
ReplyDelete