ஞானசாரரின் காவியுடை, கழற்றப்பட்டது சரிதான் - தலதாவின் அதிரடி பதில்
பௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
எவராக இருந்தாலும் அவர் ஒரு சிறைக் கைதியாக சிறைக்கு சென்றால், சிறைச்சாலைகள் சட்டத்தின் கீழ் உள்ள சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும்.
இதற்கு முன்னரும் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட பிக்குமார் சம்பந்தமாகவும் இந்த நடைமுறைகளே கையாளப்பட்டுள்ளன.
இதனால், கலகொட அத்தே ஞானசார தேரர் அல்ல எந்த பிக்குவாக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைக்கு சென்றால், சிறைச்சாலைகள் சட்டத்தின்படியே நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் காவி உடையை கழற்றி விட்டு, சிறைச்சாலையில் வழங்கப்படும் காற்சட்டையை அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
I respect Mrs.Gamini Athukorala this is the right statement.
ReplyDelete