Header Ads



நாங்கள் எல்லைமீறிய, சந்தர்ப்பங்களும் உண்டு - ஒப்புக்கொள்கிறார் பசில்

தேசிய பாதுகாப்பு என்று கூறி தனிநபர் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது என தெரிவித்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ரத்துபஸ்வெல சம்பவம் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தென் மாகாண உறுப்பினர்கள் சந்திப்பு இன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றது.

 இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

எமது ஆட்சி காலத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. தேசிய பாதுகாப்பைப் போன்று தனிநபர் பாதுகாப்பு குறித்தும் கவனத்தில் கொள்கின்ற நிலையே தற்போது உலகில் காணப்படுகின்றது. 

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. தனிநபர் சுதந்திரம் தகவலறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஊடக சுதந்திரம் என்பன முக்கியமானதாகவே கருதப்படுகின்றது. ஆனால் எமது ஆட்சி காலத்தில் காணப்பட்ட சூழல் சுதந்திரங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தியது. 

உலகில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்புடனேயே நாங்கள் போரிட்டோம். எனவே  தான் தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களில் குறைபாடு ஏற்பட்டது. சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லை மீறிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது. குறிப்பாக ரத்துபஸ்வல சம்பவத்தை குறிப்பிடலாம். அதே போன்று கட்டுநாயக்க சுதந்திர வலயத்தில் ஏற்பட்ட சம்பத்தையும் குறிப்பிடலாம். 

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது. தேர்தல் காலங்களில் மேடைகளுக்கு தீ வைத்தனர். இவற்றை தற்போது கவனத்தில் கொள்ளும் போது ஒரு சூழ்ச்சியின் பின்னணியாகவே கொள்ள முடிகின்றது. 

2 comments:

  1. நீங்கள் எல்லை மீறிய சம்பவங்களை பட்டியலிட்டால் அடுத்த தேர்தலில் ஒரு வாக்கு கூட கிடைக்காது. நீங்களே உங்களுக்கு போட்டு கொண்டால் தான்.

    ReplyDelete
  2. Correctly said Anusath, you are representing Sri Lankans voice!

    ReplyDelete

Powered by Blogger.