Header Ads



அமெரிக்க நிபுணர்களுடன், சிறிலங்கா வந்துள்ள இராட்சத விமானம்

மெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று சிறிலங்காவுக்கு  வந்துள்ளது.

சிறிலங்காவின் மேலடுக்கு வளிமண்டலம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே, நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்கள் சிறிலங்கா வந்துள்ளனர்.

சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்ட அமெரிக்க விமானப்படையின் சி.- 130 விமானத்தில் இந்த நிபுணர்கள் நேற்றுமுன்தினம் இரவு சிறிலங்காவை வந்தடைந்தனர்.

இவர்கள், சிறிலங்காவின் மேலடுக்கு வளிமண்டலத்தில்  ஏற்படும் குழப்பங்கள், மற்றும் மாற்றங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா விஞ்ஞானிகளுடன் இணைந்து. அமெரிக்க நிபுணர்கள், 10 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.


No comments

Powered by Blogger.