அவுஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்ட 32 பல்லிகள், கணினிகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பு
கணினியில் மறைத்து வைத்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அரிய வகையான 32 பல்லிகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள கைப்பற்றியுள்ளனர்.
குறித்த உயிரினங்கள் கணினிக்குள் மறைத்து வைத்து பொதி செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூருக்கு எடுத்து வரப்பட்டு பின்னர் சிங்கப்பூரில் இருந்து QH 468 என்ற விமானத்தின் ஊடாக நேற்று (14) இரவு 11.40 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயன்படுத்தப்பட்ட கணினிகள் என குறிப்பிடப்பட்டு களுத்துறை பகுதியில் உள்ள ஒருவருடைய முகவரிக்கு குறித்த பொதிகள் அனுப்பப்பட்டிருந்த போதும், அதனை பெற்றுக்கொள்ள குறித்த நபர் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த முகவரி தொடர்பில் விசாரணை செய்து பார்த்த சுங்க அதிகாரிகள் அந்த முகவரி போலியானது என கண்டுபிடித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பொதியை பிரித்து பார்த்த போது அதில் 5 சிறிய பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment