Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன், பௌத்த அடிப்படைவாதிகளுக்கு தொடர்பு - அமெரிக்கா

உலக நாடுகளின் மதச்சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கையில் கடந்த காலங்களைப் போலவே 2017லும் மத ஸ்தானங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்காவின் தூதுவர் சேம் ப்ரௌன்பேக் ஆகியோர் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டனர்.

இந்த அறிக்கையின் பிரகாரம், இலங்கையில் சிறுபான்மை மதஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள் பல பதிவாகி இருக்கின்றன.

இந்த வன்முறைகளுடன் பல பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுபான்மை மத மற்றும் இனத்தவர்களுக்கு எதிரான குரோத வாதங்கள் முன்வைக்கப்படுவதுடன், குறிப்பாக சமுக வலைத்தளங்களில் இவ்வாறான குரோத பதிவுகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.