Header Ads



ஊடக பயங்கரவாதத்தை, நடாத்தும் பிரான்ஸ் - மர்யத்திற்கு எதிராக அணிதிரள்வு


பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி இங்கு சில கருத்தாடல்கள் நடக்கும் ஏககாலத்தில் பிரான்ஸ் நாட்டில் இதே விடயம் பெரும் பூதாகரமாக்கப்பட்டிருக்கிறது.

19 வயதான மர்யம் பர்து (Maryam Pougetoux) , பாரிஸ் நகரிலிருக்கும் சோர்போன் பல்கலைகழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் (வி)யே பேசு பொருளாகியிருக்கிறார் . செய்த குற்றம் : ஸ்காப் அணிந்து கொண்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தத்து . இவர் பெரும் குற்றம் செய்துவிட்டதை போல பிரான்சின் சில பத்திரிகைகளும் அமைச்சர்களும் பதறியடித்துக்கொண்டு கண்டனம் தெரிவிக்க, அவரின் தொலைபேசி இலக்கம் சமூக ஊடகங்களில் வெளியானதால் பல இனவாத பாலியல் மிரட்டல்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்.

அதிலும் நாம் கவனிக்க வேண்டியது அவரின் பேட்டியில் உள்ள கருத்துக்கள் எதுவும் விமர்சிக்கப்படவில்லை, ஒரு பல்கலைகழத்தின் மாணவ தலைவராக இருந்து கொண்டு எப்படி நீ ஸ்காப் அணிந்து கொண்டு பேட்டியளிப்பாய் என்பதே குற்றச்சாட்டு. இதற்குள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் ஊடக பயங்கரவாதத்தை நடாத்தும் பிரான்ஸ் நாட்டின் சர்ச்சைக்குரிய சார்லி ஹெத்தூ (Charlie Hebdo) முன்பக்கத்தில் மர்யத்தின் முகத்தை குரங்குடன் ஒப்பிட்டு தனது வஞ்சகத்தை தீர்த்துக்கொண்டது. அதேநேரம் இன்னொரு பக்கம் மர்யத்துக்கான ஆதரவு தளமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சிலவும் மர்யத்துக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறன.

இந்த விடயத்தை அரசியலாக்கியவர்கள்தான் வெட்கப்படனும், ஹிஜாப் எனது தெரிவு, அது எனது நம்பிக்கை , ஆம் அது வெளிப்படையானதும் (visible) கூட என்று மர்யம் தனது உறுதிப்பாட்டை வெளிப்பத்தியிருக்கிறார்.

ஆடை தெரிவு என்பது தனிப்பட்ட நபர்களின் சுதந்திரம என்பதுதான் எனது நிலைப்பாடு. ஆனால் முஸ்லிம்கள் , இஸ்லாம் என்றவுடன் விழுந்தடித்துக்கொண்டு வந்து அடிப்படைவாதம் , பயங்கரவாதம் என்று இங்கு கம்பு சுத்தும் நபர்கள் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் மர்யம் என்ற முஸ்லிம் மாணவி மீது திணிக்கப்பட்ட மிரட்டல்களையும், ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித சுதந்திரத்தை கேளிக்குள்ளாக்கியிருக்கும் சார்லி ஹெத்தூ (Charlie Hebdo) வை பற்றி பேசப்போவதில்லை!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் , ஈராக்கில் ஐஸ்ஐஸ் இற்கும் , பிரான்சில் பிரான்சு அரசாங்கத்திற்கும் அதன் ஊடகங்களுக்கும் “அடிப்படையில்” எந்தவொரு வித்தியாசமும் இல்லை.
#IsupportMaryam

Dilshan Mohamed



2 comments:

  1. ஒரு சமூகத்தின் ஈமான் எனும் இறை நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க  அதனை நோக்கி சோதனைகளும் அதிகரிப்பது இயல்பு.

    அவ்வகையில் நம்மிவ்விரு நாடுகளுக்குமிடையில் ஓரொற்றுமையுண்டு.

    ReplyDelete

Powered by Blogger.