Header Ads



அபாயாவுக்கு தடை விதித்த பாடசாலையில், அரசாங்க சட்டம்தான் உள்ளது...!

-Fassy-

திருகோணமலையில் தொடங்கி இஸ்லாமிய  உலகின் நாற்கோணங்களிலும் உள்ள முஸ்லிம்களை வெறுப்பும் கவலையும் அடையச் செய்திருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள் பற்றி  நம் கவனம் ஈர்க்கப்படுகிறது.

இலங்கையில் இஸ்லாமிய ஆடையான அபாயாவுக்கான தடை வந்திருப்பது தனியார் நிறுவனமொன்றில் அல்ல.  அரசாங்க நிறுவனம் ஒன்றில்.  எனவே, அரசாங்கச் சட்டமே அங்கு செல்லுபடியாக வேண்டும்.

ஒவ்வொரு அரச நிறுவனங்களிலும் தாம்தாம்  விரும்பியவாறு சட்டங்கள் இயற்றி பணிபுரிவது அரச நிர்வாகத்தையே கேள்விக்குரியது ஆக்கி விடும்.

இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் மத கலாச்சார உடைகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.  

எனவே, பகுத்தறிவு  ரீதியில்கூட அதி ஒழுக்கமும் மரியாதைக்குரியதுமான  இஸ்லாமிய ஆடையான அபாயா அங்கு அனுமதிக்கப்படல் வேண்டும்.

இதற்கு மாற்றமான உடைகளால் சமூகத்தில் ஏற்படக் கூடிய ஒழுக்கச் சீர்கேடுகளையும் குற்றச் செயல்களையும் அரசாங்கம் முதலில் உணர வேண்டும்.

இஸ்லாமிய ஆடைகள் ஒழுக்கம் நிறைந்ததோர் சிறந்த சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப பெரும் பங்காற்றுகின்றன.   

சுமுகமாக இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள சம்பந்தப்பட்ட அரசாங்க  கல்லூரி நிர்வாகம்  உடன்படாதபோது சட்ட உதவியை நாடுவதே மேல்.

இப்பிரச்சினையை வைத்து, ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரு சமூகங்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி ஆதாயம் அடைய முயற்சிப்போரை இனம் கண்டு  தண்டிக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் இறைக் கட்டளைக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட கலாச்சார ஆடைகளை முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது.

அத்துடன், கண்டி மற்றும் அம்பாறை அழிவுகளுக்கான நஷ்ட ஈடு 100%  அரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்துக்கு முன் எச்சரிக்கையாக கடுமையாக அறிவுறுத்தியிருந்த நிலைமையிலும், சம்பவங்களுக்கு முஸ்லிம்களின் உடந்தை இல்லாத நிலையிலும் ஒரு பக்கச் சார்பான ஓரினத்தைக் குறிவைத்துத் தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டிருப்பதால், அரசாங்கமே இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளுக்கு நிகரான தொகையை சிறையிலிருந்து உழைத்து ஈடு செய்யுமாறு அரசாங்கம் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். 

அவ்வாறான தண்டனகளே, இதன்பின் யாரும் இவ்வாறான குற்றச் செயல்களில்  ஈடுபடுவதை கட்டுப்படுத்தும். 

முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவோர் இவை பற்றிக் கவனத்தில் எடுக்கவேண்டும் என்று எதிர்பாரக்கிறோம். 

1 comment:

  1. You are talking something that is not going to happen under the current situation. So better transfer Muslim Teachers to Muslim Schools close the chapter for ever. Let us mind our business in our schools. Let them mind theirs.

    ReplyDelete

Powered by Blogger.