ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார்..? கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம்
அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பதில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில், உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட முடியாது.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதையும் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை.
மகிந்த ராஜபக்ச, தனக்கு பின்னர் தனது மகன் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைவராக கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார்.
இதனால், கோத்தபாய வருவதை அவர் விரும்பவில்லை.
இதன் காரணமாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு கோராது, பொதுத் தேர்தலை நடத்துமாறு கோருவதாகவும் குமார் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.
இங்கே எல்லாருக்கும் யார் அடுத்து கதிரையில் உட்காருவது என்றுதான் சண்டை நாடு எக்கேடு கேட்டு போனாலும் எந்த கவலையும் இல்லை. ஆமா சாமி போடுகின்ற எங்களைப்போன்ற மக்குகள் மடசாமிகள் எல்லாவற்றையும் சிந்திக்காமல் இந்த கள்வர் கூட்டங்களை ஆதரவளித்து வாக்கு போடுகின்ற வரைக்கும் இந்த கள்வர்களின் காட்டில் எப்போதும் தங்க மழை தான்.
ReplyDeleteYes 1000%true
ReplyDeleteஇனி முஸ்லீம் வாக்குகள் ரணிலுக்கு கணிசமா விழாது / வேறு முகாமுக்கும் போகாது / ரணில் பல வழி களிலும் முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்தர், திருடனை பிடிக்க வந்தவனே மகா திருடனாகியது இங்கு , கண்டி வன் முறையை அடக்காது முஸ்லீம் களுக்கு பாடம் புகட்டினாராம் / ஒருவனை ஒருமுறை ஏமாற்றலாம் .......... ரணில் இல்லாத வேட்பாளர் வந்தால் முஸ்லீம் வாக்குகள் யானைக்கே விழும் / இல்லயில் மண் ..
ReplyDelete