இலஞ்சம் பெற்றவர்களுக்கு விளக்கமறியல் - ஜனாதிபதி மகிழ்ச்சி
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை நேற்று (03) இரவு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதேவேளை ஊழல் மோசடிக்க்கு எதிரான அரசாங்கத்தின் தீர்க்கமான கொள்கையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் இதனூடாக உறுதியாவதாகவும், சட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பினை வகிக்கும் அரச அதிகாரிகளுக்கு தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்றுவதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனமான, பக்கச்சார்பற்ற பின்னணி தொடர்பாக தாம் மகிழ்சியடைவதாக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
It is shameful for him to appoint these people by him. How can he be happy?
ReplyDelete