"பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களினால், வீதியில் நடந்துசெல்ல முடியாத நிலை"
நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகரால் தனது நாற்காலியின் கௌரவத்தை பாதுகாக்க முடியாது போயுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு இன்று -30- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்திடம் பணம் பெற்ற மற்றும் தொலைபேசி வழி தொடர்புகளை கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாக, எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய நாடாளுமன்ற முறைமையை தற்போதைய சபாநாயகர் திரிபுபடுத்தியுள்ளார். அர்ஜூன் அலோசியஸூக்கு சொந்தமான நிறுவனத்திடம் பணம் பெற்றவர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் இருந்தால், அவர்கள் உடனடியாக நீக்கப்படுவார்கள் எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment