Header Ads



முஸ்லிம் தலைமைகளின் கூட்டமைப்பு, காலத்தின் தேவை - ஜெயபாலன்


பொதுப் பிரச்சினைகளைக் கையாளுவதற்கான அரசியல் வேறுபாடுகளைத் தாண்டிய முஸ்லிம் தலைமைகளின் கூட்டமைப்பு ஒன்று காலத்தின் தேவையாக உள்ளது. 

முஸ்லிம்கள் சம்பந்தபட்ட பொதுப் பிரச்சினைகளில், முஸ்லிம்கள் சார்பாக அரசுடனும், தமிழர் மற்றும் மலையக தமிழ் தலைமைகளோடும் முஸ்லிம்கள் சார்பாக ஒரே குரலில் பேச பல்வேறு அரசியல் நிலைபாடுகள் சார்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கிடையிலான கூட்டமைப்பு தேவை என்பதை நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறேன். 

கடந்த காலங்களில் சர்வதேச சமூகம் முஸ்லிம் தலைமைகள் அரசில் அங்கம் வகிப்பதால் முஸ்லிம்களை தனித் தரப்பாகக் கொள்ளாமல் அரசு தரப்பாகவே கருதியமை இங்கு நினைவு கூர தக்கது. 

பெரும்பாலாம தமிழர் மலையகத் தமிழர் தரப்பிலும் அத்தகைய பார்வை உள்ளது. 

முஸ்லிம்கள் தனித் தரப்பா அல்லது அரசு தரப்பா என்கிற சிக்கலுக்கும் அரசியல் கடந்த முஸ்லிம் கூட்டமைப்பே விடையாக அமையும். 

அத்தகைய ஒரு கூட்டமைப்பு முஸ்லிம் சிவில் சமூகத்தின் வளற்ச்சிக்கும், முஸ்லிம் அறிஞகளின் கூட்டமைப்புக்கும் வழி வகுக்கும். 

இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கான முஸ்லிம்களின் பங்களிப்பையும் அத்தகைய ஒரு கூட்டமைப்பே முழுமை செய்யும். -

 வ.ஐ.ச.ஜெயபாலன்

5 comments:

  1. ஜெயபாலன் ஐயா அவர்களே, தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின் இதுவரையில் எந்த ஒரு அரசியல் வாதியும் ( ஹக்கீம், றிசாத், அதாவுல்லா, ஹிஸ்புல்லா...etc ) முஸ்லிம்களுக்கான அடிப்படை
    உரிமை பிரச்சினை பற்றியோ அல்லது தேசிய அரசியல் பிரச்சினை பற்றியோ ஏதாவது காத்திரமான தீர்வை முன்வைத்துள்ளார்களா?? எம்மை பொறுத்த வரைக்கும் அவர்களுக்கு இந்த விடயங்கள் சம்பந்தமாக ஒரு காத்திரமான அறிவும், தீர்வும் இல்லை என்றே தோன்றுகிறது. இவர்கள் எந்தக்கட்சி (கூட்டணி ) ஆட்சி அமைக்கும் அதில் எப்படி நாம் பங்காளர்களாக ( பணம், பதவி, அந்தஸ்து) இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த ஒரு அரசியல் சித்தாந்தமோ, அரசியல் இலக்கோ இல்லை. இந்த அடிப்படையில் இருக்கும் ஒரு அரசியல் வியாபாரிகள், சுயநல வாதிகள் ஒன்று சேர்ந்து எதைத்தான் சாதிக்கப்போகிறார்கள் அல்லது எதை பற்றித்தான் அவர்களால் சிந்திக்க முடியும். இவர்களால் எந்த ஒரு அரசியல் அழுத்தத்தையோ, போராட்டத்தையோ முன்னெடுத்து செல்லக்கூடிய அரசியல்-ஆண்மை அற்றவர்கள். இவர்களால் ஆகக் குறைந்தது இந்த பலசேனாக்களையாவது அரசுக்கு அழுத்தம் கொடுத்து கட்டுப்படுத்த முடியாதவர்களாகவே உள்ளார்கள். பலசேனாக்களின் வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளையாவது விரைவு படுத்தி பெற்றுக் கொடுப்பதட்கே வக்கில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆக முஸ்லீம் சமூகத்துக்கு நிட்சயம் ஒரு மூன்றாவது சக்தி உருவாக்கப்பட வேண்டும். அது பற்றி அரசியல் ஆர்வலர்களும், புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், இந்த சமூகமும் முயட்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. முஸ்லீம் தலைமைகளின் கூட்டமைப்பு, அரச சார்பாக இயங்குவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

    ஆனால், முஸ்லிம்களுக்கு பிரச்சனைகள் வரும் நேரங்களில், மயான அமைதி காட்டும்போது மட்டுமே, பிரச்சனை எழுகின்றது.

    முஸ்லிம்கள் அடையும் இன்னல்களை, நீதிமன்றங்களின் மூலம் தீர்த்து வந்த, முஸ்லீம் சட்டத்தரணிகள் குழுவையும், முஸ்லிம்களாலேயே இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.

    முஸ்லீம் தலைமைகளின் கூட்டமைப்பு, முஸ்லீம் அரசியல்வாதிகளின் கீழ் அல்லது ஜம்மியத்துல் உலமா அமைப்புகளின் ஆலோசனைகளின் கீழ் செயல்படுமானால், அப்படிப்பட்ட முஸ்லீம் தலைமைகளின் கூட்டமைப்பு சிறிதும் பயன் அற்றது.



    ReplyDelete
  3. சகோதரர் ஜெயபாலன் அவர்களுடைய கருத்துக்கள் இனங்களுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கும் தேச அபிவிருத்திக்கும் இன்றியமையாதன.

    அகில இலங்கை உலமா சபை, முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையேயான ஓர் அரசியல் கூட்டமைப்பை உருவாக்க முன் நிலையில் இருந்து ஒத்துழைக்கலாம்.

    ஆனால், முஸ்லிம்களின் உண்மையான தலைமைத்துவம் அதன் மார்க்க அறிஞர்களின் ஒன்றியமான உலமா சபையிடமே இருக்கும்.

    எப்போது இஸ்லாமிய அறிஞர்கள் அபேட்சகர்களாக இருந்து அரசியலில் நுழைந்து ஆட்சியில் அங்கம் வகிப்பார்களோ, அப்போது அரசியலும் ஆன்மீகமும் இணைந்த ஓர் பலமான இஸ்லாமியக் தலைமை இலங்கையில் பரிணமிக்கும்.

    அத்தகைய தலைமை இலங்கையின் அனைத்துக் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை இறை வழிகாட்டலில் இருந்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் உன்னத  நிலையில் இருக்கும்.

    ReplyDelete
  4. ஹ்ம்ம் நடக்கவே நடக்காது அரசியில் ஆயிரம் கட்சிகள் ஆனால் முஸ்லிம்கள் இலங்கையில் உள்ளதோ வெறும் 7 தொடக்கம் 10 % வீத மக்கள் 100 பேருக்கு ஒரு கட்சி சரி இஸ்லாம் மார்க்கத்தை பின் பற்றும் முஸ்லிம்களை எடுத்து கொண்டால் இதிலும் பல பிரிவு இனி எங்கே கூட்டு சேர்வது . படைத்த அல்லாஹ் நாட்டம் கொண்டு மற்றும் முழு இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து கேட்கும் துஆ வில் மட்டுமே இது சாத்தியம்.

    ReplyDelete
  5. Nalla Lawyersgalum, Imtias Bakir Makkar pondra Nalla thalaivargalum, paditha nalla pattatharigalum inainthu muslimgalukku vazhi kaattinal nandaraga irukkum.Ippothu irukkum arasiyal viyabarigalayum Jamiyathul ulamavaiyum ithil serkka vendam.Indru muslimgalin alivukku intha irandu paguthiyinarthan karanam.

    ReplyDelete

Powered by Blogger.