எவரும் எதிர்பார்க்காத அமைச்சு, எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது - பொன்சேகா
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டனர். ஆனால் தற்போது எவரும் எதிர்பார்க்காத நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கடந்த காலங்களிலும் சரி தற்போதைய தேசிய அரசாங்கத்திலும் கைவிடப்பட்ட ஒரு துறையாகவே வனஜீவராசிகள் பாதுகாப்பு துறை காணப்படுகின்றது.
தேசிய அரசாங்கத்தின் குறுகிய காலக்கட்டத்திற்குள் வனவிலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் பல முன்னேற்றகரமான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு சிறந்த துறையாக செயற்படுத்துவேன் என உறுதியளித்தார்.
நிலையான அபிவிருத்தி ,வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் பிரதேச அபிவிருததி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சராகிய உங்களிடம் நாம் வேண்டுவது, எமது தேசியக்கொடியில் ஓர் வன ஜீவராசியின் படம் இருப்பது சரியானதுதானா என்பதை மீள் பரிசீலனை செய்யுங்கள்.
ReplyDeleteமேலும், மீண்டும் வன ஜீவராசிகள் பெயர்களில் மனிதர்கள் பிரிந்திருந்து யுத்தம் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அத்தோடு, ஏற்கனவே வன ஜீவராசியின் பெயரில் உரிமைக்காகப் போராடி உயிர்களைத் தியாகம் செய்த தமிழ்ச் சகோதரர்களின் நியாயமான உரிமைகளை, தாமதமில்லாது அளித்து விடும்படி அமைச்சரவைக்குள் இருந்து அரசாங்கத்தை வலியுறுத்திப் பெற்றுக் கொடுங்கள்.
உயிர்களின் பெறுமதிகளையும் அவற்றைத் தியாகம் செய்ததன் நோக்கத்தையும் ஏனையோரை விட அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர், நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் இந்த வேண்டுகோளை உங்களிடம் முன் வைக்கிறோம்.