ஆத்திரப்பட்ட ஜனாதிபதி - சோபித தேரரின் ஜனனதின நிகழ்வு அமர்க்களமானது
மாதுளுவாவே சோபித தேரரின் 76 வது ஜனன தின நிகழ்வில் கலந்துக்கொள்ள சென்றிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் ஆத்திரமான தொனியில் உரையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனன தின நிகழ்வுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் சோபித தேரர் நினைவு நிதியத்தின் தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோரிடம் இது குறித்து விசாரித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது இப்படிதான் வேலைகள் நடக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் கிடைக்காத காரணத்தினால் என்னை பயன்படுத்திக்கொண்டனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறைப்படுத்திய 100 நாள் திட்டத்தை உருவாக்கியது யார் என்பது எனக்கு தெரியாது.
100 நாள் வேலைத்திட்டம் என்பது செய்த மிகப் பெரிய தவறு. இல்லாவிட்டால் ஜனவரி 8 ஆம் திகதி இரவே நாடாளுமன்றத்தை கலைத்திருக்கலாம்.
சில கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இது போன்ற குற்றச் செயல் எதுவுமில்லை.
தேர்தல் பரப்பரப்பு காரணமாக அரச அதிகாரிகள் வேலைகளை செய்வதில்லை. இதனால், நாடு ஸ்திரமற்ற நிலைமைக்கு செல்லும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
it was pathetic to see a president with unlimited powers almost crying in the public. what a shame. this is the time for him to do the right thing for the country and its people. call for the next presidential election.
ReplyDelete