விஜேதாசவுக்கு வழங்கமுடியும் என்றால், ஏன் ரவிக்கு வழங்க முடியாது..?
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு இம்முறை அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் பதவியை வழங்காமை குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைத்துவத்திடம் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு முன்னர் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட விஜேதாச ராஜபக்சவுக்கு மீண்டும் அமைச்சர் பதவியை வழங்க முடியுமாயின் எந்த காரணத்திற்காக ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சர் பதவியை வழங்கவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் நடந்த மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி சம்பந்தமாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துள்ள நிலையில், அவர் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது.
அதன் பின்னர் நியமிக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். அமைச்சர் பதவியில் இருந்து விலகி ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான எதிர்க்கட்சியினர் அவருக்கு சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்ட போது அவர், அவற்றை தனியாக எதிர்கொள்ள நேரிட்டது எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நீண்டகாலமாக மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினருடன் தொடர்புகளை கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. அரசாங்கத்திலும் அமைச்சரவையில் இருப்பது குறித்தும் தான் வெட்கப்படுவதாக விஜேதாச ராஜபக்ச ஒரு முறை கூறியிருந்தார்.
இவ்வாறு கூறியிருந்த அவர் நேற்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார். இப்படியான நபருக்கு அமைச்சரவையில் இடம்பெற முடியுமாயின் ரவி கருணாநாயக்க தொடர்பில் என்ன பிரச்சினை இருக்கின்றது எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Ranil doesn't know that Wijedasa Rajapakse is an insider agent of Joint opposition.
ReplyDelete