இந்த அரசாங்கம், கிரிக்கட்டை அழித்துவிட்டது - கொதிக்கிறார் அர்ஜுன
• அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கிரிக்கட் ஆட்டநிர்ணயம் தொடர்பாக தேசிய ஆடுகள பொறுப்பாளர் மற்றும் கிரிக்கட் உயர் அதிகாரிகள் பொறுப்பிலிருந்து விலகமுடியாது.
• நான் கிரிக்கட் விளையாட்டுக்கு நடந்தவற்றை தெளிவுபடுத்தியுள்ளேன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
• முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க அவர்கள் கிரிக்கட்டை பற்றி கற்றுக்கொண்டார். ஆனால் தற்போது உள்ள அமைச்சர்கள் சூதாட்டகாரர்கள் மற்றும் வியாபாரிகளிடம் கிரிக்கட்டை தெரிந்துகொள்கின்றனர்.
• இன்று எமது கிரிக்கட் விளையாட்டு புகீ மற்றும் சூதாட்டகாரர்களின் வலைக்குள் விழுந்துள்ளது. இதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் தற்போதைய அரசாங்கமும் பொறுப்பு கூறவேண்டும்.
-அமைச்சர் அர்ஜுன ரணதுங்க
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இன்று -30- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'2015ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை அமைத்தபோது கிரிக்கட் விளையாட்டு ஒரு நல்ல நிலையில் இருந்தது. நாங்கள் உலக டெஸ்ட் போட்டியில் 3வது மற்றும் 4 இடத்தில இருந்தோம். 20க்கு 20 போட்டியில் முதலிடத்தில் இருந்தோம்.
எமது அரசாங்கம் வந்த பின் இந்த கிரிக்கட்டை தேவையற்ற நிர்வாகத்திற்கு ஒப்படைத்து இன்று கீழ்நிலைக்கு சென்றுள்ளது. சட்டத்தை நடைமுறைபடுத்தாது மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் நான் சென்று முறைபாடு செய்துள்ளேன். ஆனால் அமைச்சராக இருந்தும் இன்று வரை எனக்கு மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக நான் கவலைபடுகின்றேன். நான் அமைதியாக இருக்கவில்லை நான் இருதொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். அதுமட்டுமல்லாது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுத்துமூலமாக விளக்கம் கொடுத்துள்ளேன். அதுமட்டுமல்ல முன்னால் அமைச்சருக்கும் இதுதொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளேன். துரதிஷ்டவசமாக இதற்காக குரல்கொடுக்க எவரும் முன்வரவில்லை. இதனால் டெஸ் போட்டி தரவரிசையில் 7 அல்லது 8 ஆம் இடத்தில் இருக்கின்றோம். 20 க்கு 20 நாங்கள் முதலிடத்தில் இருந்தோம் ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானை விட கீழே உள்ளோம். ஆனால் இந்த நிர்வாகத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள் நாங்கள் இலாபமடைந்துள்ளோம். இதில் காட்ட முனைவது இன்று கிரிக்கட் வியாபாமாக மாறியுள்ளது. நிறைய விளையாட்டுக்களில் விசேடமாக இந்தியா இங்கு வரும்போது தொலைக்காட்சி டென்டர் மூலமாக நிறைய பணம் கிடைக்கும். இதைத்தான் இவர்கள் பேசுகின்றனர்.
ஆனால் நாங்கள் எதிர்ப்பார்ப்பது இலாபம் பெறுவது மட்டுமல்ல கிரிக்கட்டை முதலிடத்திட்கு கொண்டுவருவது. இதற்கு இந்த அரசாங்கமும் முன்னாள் விளையாட்டு அமைச்சரும் பொறுப்பு கூறவேண்டும். ஆடுகளத்தையே மாற்றக்கூடிய நிர்வாகமே இன்று காணப்படுகின்றது.
வாரலாற்றை எடுத்தால்; நாங்கள் 1982ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கு போகும் போது மைதானம் பச்சை நிறத்தில் இருக்கும். நாங்கள் அங்கு போய் சொல்லவும் முடியாது வேகப்பந்து வீச்சாலர்களிடம் கேட்கவும் முடியாது சரியான மைதானத்தை தாறுங்கள் என்று. இந்த பிரதிபலனை அந்த நாடுகளே அடையும். அதுதான் கிரிக்கட் கலாசாரம். அதுபோலவே நாங்கள் இங்கு இருக்கும் போது ஆடுகளத்தை பச்சை நிறமாக்கி விளையாடுவோம் அல்லது சுழல்பந்து வீச்சாளருக்கு ஏற்றவகையில் விளையாடுவோம். முரளிதரன், குமார்தர்மசேன மற்றும் ரங்கன ஹேரத் போன்ற வீரர்கள் விளையாடும்; நாட்டில நாங்கள் சாதகமாக பயன்படுத்தியது மற்றும் பல நுட்பங்களை பிரயோகித்தே வெற்றிகளை பெற்றுள்ளோம். நாங்கள் வெளிநாடுகளில் பட்ட கஷ்டத்தை மற்ற அணிகள் இங்கு வந்து அனுபவிக்கவும் செய்தோம். நாங்கள் விளையாடும் காலங்களில் விளையாட்டு அரங்குக்கு சென்று பார்த்து பல ஆலோசனை செய்தே நாங்கள் பல வெற்றிகளை பெற்றுள்ளோம். ஆனால் இன்று ஆடுகள மைதானத்தை தீர்மானிப்பது நிருவாகத்திற்கு ஏற்றாட்போலவாகும். விளையாடடு வீரர்களுக்கு ஏற்றால் போல் அல்ல.
நான் சின்ன பதிவை பார்த்தேன். லசிங் மாலிங்க ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் ஆடுகள மைதானத்தை மாற்றம் செய்தமை தொடர்பாக. இன்றுவரை இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
எனக்கு புரியவில்லை இந்த கிரிக்கட் அதிகாரிகள் சூதாட்டகாரர்களுக்கு கிரிக்கட்டில் இடம்கொடுப்பதுதான். நான் இது பற்றி விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளேன். எனக்கு ஞாபகம் உள்ளது பிரேமசிறி அவர்கள் எங்களோடு கிரிக்கட் விளையாடியுள்ளார். அவர் காலி ஆடுகள மைதானத்தை செய்யும் போது அதையும் நிர்வாகிகள் மாற்றினார்கள்;. அவர்கள் தாங்கள் விரும்பியவர்களை நியமித்து இதனை மாற்றியமைத்தார்கள்.
எனக்கு ஞாபகம் உள்ளது ஒரு ஊடகத்தில் செய்தி வெளிவந்தது- போட்டி ஆரம்பிக்கும் போது கிரிக்கட் நிறுவாகத் தலைவர் போய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று.
இந்த நிலைக்கு நாம் செல்வோம் ஆனால் கிரிக்கட் நாசமடையும் என்பதே உறுதி.
கிரிக்கட் வரலாற்றில் இருந்த மோசமான நிர்வாகம் தற்போது இருக்கும் நிருவாகமாகும். இந்த நாட்டில் சட்டம் உண்டு. இருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி. ரத்நாயக்க சட்டமொன்றை வடிவமைத்தார். ஆனால் அது நடைமுறையில் இல்லை.
அசங்க குருசிங்கவை கிரிக்கட் நிர்வாகிகள் அனுப்புகிறார்கள் ஐ.சி.சீ கூட்டத்துக்கு. இதுதான் இன்றைய நிலை. காலஞ்சென்ற அமைச்சர் காமினி திசாநாயக்க அவர்கள் விளையாட்டுதறை அமைச்சராக இருந்தபோது அவர் கிரிக்கட் தெரிந்தவர்களை தன்னோடு வைத்திருந்தார். ஆனால் தற்போது இருக்கும் அமைச்சர்கள் சூதுவிளையாடுபவர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
இதனால் சட்டத்தை எங்களால் நடைமுறைப்படுத்தமுடியாது உள்ளது. ஆனால் எனக்கு மிகப்பெரிய கடமையுள்ளது இந்த விளையாட்டை மீன்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே.
இன்று எமது வீரர்கள் உதவியற்றவர்களாக உள்ளனர். தேர்தல் மூலமாக வந்த இந்த அதிகாரிகள் கிரிக்கட்டை சீரலித்துவிட்டனர் கடந்த 3 ஆண்டுகளில்.
களுத்துரை மற்றும் பணந்துரை போட்டியை பற்றி நீங்கள் தெரிந்திருக்கும்.
சாமர சில்வா சொல்லியிருக்கிறார் ரவின் விக்கிரமரத்ன இன்று உள்ள செயலாளர் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று. இவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்டநிர்னயத்தில் சம்பந்தப்பட்ட நபர்களே இன்று நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றால் எந்த வீரர்களை எந்த அணிக்கும் கொண்டுவரணே;டும் என்ற அதிகாரமும் அவர்களுக்கு உண்டு. இது கடந்த அமைச்சருக்கும் தெரியவில்லை. தற்போது இருக்கும் அமைச்சருக்காவது தெரியவேண்டும். நான் எனது கடமையை செய்துள்ளேன். நான் எங்கெல்லாம் சொல்லவேண்டுமோ அங்கெல்லாம் சொல்லிவிட்டேன். ஆனால் பயனில்லை. இனி கடவுளுக்கத்தான் சொல்லவேண்டும். இதில் கண்டுபிடிக்கப்பட்டதைவிட அதற்கு மேலாக சென்று பார்க்கவேண்டும்.
எனக்கு தெரிந்த மாத்திரத்தில் குதிரைபந்தயம் மட்டுமே சூதாட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கிரிக்கட் போட்டியில் சூதாட்டம் செய்ய முடியாது. ஆனால் அதுவும் சட்டமாக்கப்பட்டது போல சிலசில ரேஸ்புகி இடங்களில் சூதாடுகின்றனர். அதையும் நான் பார்த்தேன் இந்திய தொலைக்காட்சியில். குறிப்பாக சிம்பாபே மற்றும் பங்களாதேஷ் அணியுடனான தோல்வியில் பாரிய பண பரிமாற்றம் இந்த ரேஸ்புகியில் இடம்பெற்றுள்ளது. நான் ஊடகங்களில் தெரிவிப்பது இதுபற்றி தேடிப்பார்த்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துங்கள் என்று.
இன்று ஒரு வீரராவது தேசிய அணிக்கு செல்வார் என்று சொல்ல முடியாது உள்ளது காரணம் பாடசாலை கிரிக்கட் அணிணை வீழ்ந்துள்ளது. கடந்த காலத்தில் சொல்வதானால் பாடசாலை கிரிக்கட் அணியில் இருந்து தேசிய அணிக்கு வீரர்கள் தேர்வாகும் அளவுக்கு தகுதிக காணப்பட்டது. இன்று பாடசாலை கிரிக்கட்டுக்கு வளங்கள் செல்வதில்லை. காரணம் 300 உட்பட்ட அணிகள் இருப்பதால். ஆனால் இந்த பாடசாலை வாக்குகள் 2 மட்டுமே உள்ளது. இதற்கு பதிலாக கிரிக்கட் சங்கங்களுக்கு மில்லியன் கணக்கில் சலுகைகள் வழங்குகிறார்கள். காரணம் அதிலிருந்து வாக்குகளை பெறுவதற்கே. இப்படி கிரிக்கட் நிர்வாகம் இருந்தால் கிரிக்கட் அழியும். எதிர்காலத்தை பற்றி சிந்திக்காத நபர்களே இன்று உள்ளனர் நிர்வாகத்தில். கிரிக்கட் நிர்வாகத்தில் உள்ள சிலர் உலக கிரிக்கட் கவுன்சிலுக்கு தகுதிபெற நினைக்கின்றார்கள். களுத்துறை பணந்துரை போட்டி தொடர்பான அறிக்கையை முன்னாள் அமைச்சர் மற்றும் நிர்வாகம் மறைத்திருந்தது. கிரிக்கட் சங்கங்களிக்கிடையிலான விளையாட்டை மாற்றி அமைக்க முடியுமாயின். இது நிர்வாகத்தின் சீர்கேடாகும்.
நானும் நலல்hட்சி அரசாங்கத்தை கொண்டுவந்தவன். ஆனால் இந்த அரசாங்கமோ சூதாட்ட காரர்களுக்கு கொடுத்து கிரிக்கட்டை அழித்துவிட்டது.' என்றார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள்.
this govt destroyed not only cricket but the whole country.
ReplyDelete