வர்த்தமானியைக்கூட சரியாக வெளியிட, முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது
இலங்கை தற்பொழுது பாரிய நெருக்கடிக்கு உட்பட்டுள்ளதாகவும் இதனால், அரசாங்கமும், நாட்டிலுள்ள சகல அரச நிறுவன முறைமையும் பாரிய வீழ்ச்சிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளயில் இன்று (06) நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளும் குப்பையாக மாறியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு மக்களிடத்திலுள்ள வரவேற்பும் காற்றாக மாறியுள்ளது.
எந்தவித சட்ட முறைமையும் செயற்படுத்த முடியாத அளவுக்கு நாட்டு நிலைமை மோசமடைந்துள்ளது. குறைந்த பட்சம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றைக் கூட சரியான முறையில் வெளியிட்டுக் கொள்ள முடியாத நிலைக்கு நாட்டு நிலைமை தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் தலைவர்களிடம் ஞானம் இல்லாத ஒரு நிலைமை காணப்படுவதாகவும், இதனால், பாரிய சிக்கலுக்குள் நாடு வீழ்ந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Dc
இன்றைய நாட்டின் நிலைமை சரியாக எடுத்துரைக்க பட்டுள்ளது. இதட்கான முழுப்பொறுப்பும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மைத்திரியே பொறுப்பெடுக்க வேண்டும். ஒரு முதுகெலும்பில்லாத ஜனாதிபதி. அடுத்த விடயம் சிங்களத்தீவிரவாதமாகும். நாட்டு மக்களிடத்தில் நாட்டு பற்று கிடையாது. மக்களிடத்தில் இனரீதியான, இனத்துவேசமான சிந்தனை மேலோங்கி உள்ளது. ரணிலினதும், மைத்திரியினதும் கூட்டு தோல்விகண்டுள்ளது. மக்கள் மூன்றாவது சக்தியை பற்றி சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளனர்.
ReplyDelete