Header Ads



இலங்கையை மோசமாக, சித்தரித்துள்ள முரளீ - தயாசிறி ஆவேசம்

அரசியல்வாதிகளின் தலையீட்டினால் இலங்கை கிரிக்கெட்டிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கையை முன்னாள் வீரர் முத்தைய முரளீதரன் மோசமாக சித்தரித்துள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் ஒப்சேவரிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

நான் விளையாட்டு அமைச்சராக இல்லாதபோதிலும் இலங்கையின் விளையாட்டு வீரர்களிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பேன்.

அரசியல்வாதிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது   இலங்கையை பொறுத்தவரை புதிய விடயமல்ல,மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் கிரிக்கெட் அமைப்புகளின் தலைவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். இதன் காரணமாக பல வருடங்களாக அரசியல்வாதிகள் விளையாட்டுத்துறையுடன் தொடர்பை கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய நடுவர்கள் முரளீதரன் பந்தை எறிகின்றார் என குற்றம்சாட்டியவேளை முரளீதரனிற்கு அவ்வேளை விளையாட்டமைச்சராகயிருந்தவரும் நிர்வாகிகளும் ஆதரவு வழங்கினர்.

முத்தையா முரளீதரன் இந்திய ஊடகங்களிற்கு கருத்து தெரிவிப்பதற்கு பதில் இலங்கை ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்திருக்கவேண்டும்.

முரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் அவரின் கருத்துக்களை நான் ஏற்கப்போவதில்லை. பல விளையாட்டு வீரர்கள் எங்களை அணுகி ஆதரவும் உதவியும் பெறுகின்றனர் நாங்கள் தொடர்ந்தும் அவர்களிற்கு ஆதரவு வழங்குவோம்.

லசித் மலிங்க குறித்து எனக்கு தனிப்பட்ட பகையில்லை அவர் என்னை எப்படி அழைத்தார் என்பது குறித்தும் நான் கவலையடையவில்லை.

எனக்கு லசித் மலிங்கவின் கல்வித்தகமை என்னவென்பது தெரியும் அவர் சிறந்தவீரர் ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி உருவாக்கிகொள்ளவேண்டும் என்பது அவரிற்கு தெரியாது என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.