அநாகரீகமான தண்டனை வழங்கிய, ஆசிரியருடக்கு உடனடி இடமாற்றம்
கொழும்பு பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரையும், மாணவி ஒருவரையும் தனியாக ஓர் அறையில் அடைத்து தண்டனை விதித்த ஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிப்பதாகக் கூறி மாணவனையும், மாணவியையும் ஓர் அறையில் ஒரு மணித்தியாலம் வரையில் தனியாக குறித்த ஆசிரியர் அடைத்து வைத்துள்ளார்.
இந்த வித்தியாசமான தண்டனையை விதித்த ஆசிரியர் தொடர்பில் எவ்வித விசாரணையும் நடத்தாது இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து குறித்த பாடசாலையின் அதிபர் ஆசிரியரை இடமாற்றம் செய்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து தொழிற்சங்ளுக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மாணவனுக்கும், மாணவிக்கும் வழங்கிய வித்தியாசமான தண்டனை குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தாது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை ஏற்புடையதல்ல எனவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ஸ்டாலின் கோரியுள்ளார்.
Post a Comment