அரசியல்வாதிகளுக்கு ஆருடம், கூறியவரின் மரணம் பரிதாபத்தில் முடிந்தது
இலங்கையின் பிரபல அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை கணித்த சோதிடர் தற்கொலை
இலங்கையின் பிரபல சோதிடரான நாத்தாண்டிய பீ.பி. பெரேரா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இவர் ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயில் பாதைக்கு அருகில் அமர்ந்திருந்த சோதிடர் கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
சோதிடர் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாது காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பீ.பி. பெரேரா, இலங்கையின் பிரபலமான அரசியல்வாதிகளின் ஆஸ்தான சோதிடராக இருந்துள்ளார்.
தானாக முடிவெடுத்த தனது சொந்த வாழ்வின் முடிவையே எப்படி, எங்கு, எப்போது நடக்கும் என்று சொல்லி வைத்திருக்க முடியாமல் போன ஒருவரால், எப்படி பிறருக்கு நடக்க இருக்கும் ஒன்றைப் பற்றிச் சரியாகக் கூறி வைத்திருக்க முடியும்?
ReplyDeleteஇப்படியானவர்களின் வார்த்தை களைத்தான் வாக்குகளாக நம்மிடம் உதிர்க்கிறார்கள் நம் ஊழல் இனவாதங்களுக்குப் பேர்போன சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்.
தர்மத்துக்கும், வெல்லப்படாத வரை விடப்படாத கடின முயற்சிக்கும், பிரார்த்தனைக்கும் விதியை மாற்றி அமைக்கும் வல்லமையையே இறைவன் நாடினால் தரக்கூடியவன்.