Header Ads



கிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்


சகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு..

"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது என் வண்டியில் பின்னாடி எழுதியிருந்த வாசகத்தை ஒரு பாதிரியார் பார்த்துக்கிட்டே இருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து என் அருகில் வந்து நல்லா வெயில் அடிக்குதோன்னு கேட்டார். சர்பத்தும் குடிக்க வாங்கி தந்தார் நானும் குடித்தேன் பிறகு மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

வியாபாரம் எப்படி இருக்கு என்ன? ஏது? வீட்டில் உள்ள விபரம் எல்லாத்தையும் கேட்டார் நானும் பராவாயில்லையே நல்லா பழகுறாரே என்று எண்ணி என்னை பற்றி எல்லா விபரத்தையும் சொன்னேன். பராவாயில்லை நிறைய போராடியிருக்கீங்க என்று சொல்லிட்டு பொருளாதார நிலையை கேட்டார் நானும் பொருளாதாரம் பராவாயில்லை கொஞ்ச கடன் அதை அடைக்க முயற்ச்சி செய்கிறேன் அல்லாஹ் உதவி செய்வான் என்றேன்.

எதுக்கு இவ்ளோ கடன் ஆச்சு என்று கேட்டார் சீக்கிரமா பணக்காரனாக ஆகனும்னு ஆசைபட்டு கடன் வாங்கினேன்.எதிர்பார்த்த படி இல்லாததால் கொஞ்சம் நஷ்டம்,பராவாயில்லை அது சரியாகிவிடும் என்று சொன்னேன்.பிறகு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தார். இன்னொர் சர்பத் நான் வாங்கி கொடுத்தேன்.அப்புறம் அவர் சொன்னார் நான் வேண்டுமானால் உங்களுக்கு கொஞ்சம் பண உதவி என் நண்பரிடம் வாங்கி தரவா என்றார்.

அப்போது தான் அவருடைய எண்ணம் புரிந்தது.பிறகு நான் அவரிடம் நீங்க பணம் தருவதற்க்கு பகரமாக நான் என்ன பண்ண வேண்டும்?என்றேன். உடனே அவர் புன்சிரிப்போடு சத்தியத்தை ஏற்றால் போதும் என்றார்.

பணம் கொடுத்து தான் சத்தியத்தையே பரப்ப வேண்டிய அளவிற்க்கு உங்களுடைய சத்தியத்தின் நிலை இருக்கிறதோ?என்று கேட்டேன்.

உங்கள் சத்தியத்தை சொல்லுங்கள் அது சத்தியமாக இருந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன். பணம் எல்லாம் தரவேண்டாம் என்றேன். பிறகு ஆரம்பித்தார் நிறைய பேசினார் அதில் முக்கியமாக ஏசு நமக்காகத்தான் சிலுவையில் அறையப்பட்டார். ரத்தம் சிந்தியதெல்லெம் நம் பாவத்தை அழிக்கத்தான் என்றார். அமைதியா இருந்த நான் நீங்கள் பேசியதில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் மட்டும் இருக்கு அதை கிளியர் பண்ணுங்க மதத்திற்க்கு வந்து விடுகிறேன்னு நான் சொன்ன உடனே சிரித்துக் கொண்டே சொல்லுங்க என்றார்.

ஏசு விரும்பிதான் சிலுவையில் அறையப்பட்டார் என்றால் ஏன் ஓடி ஒழிந்தார்?சிலுவையில் அறையப்படும் போது தேவனே ஏன் என்னை கைவிட்டு விட்டீர் என்று கூறினார்?.நம்முடைய பாவத்திற்க்காக ஏசு ரத்தம் சிந்திவிட்டார் என்றால் நாம் என்ன பாவம் வேண்டுமாலும் செய்யலாம் என்று உங்கள் மதம் சொல்லுகிறதா?

ஒவ்வொரு மதமும் தனது கடவுள் கொள்கையை விளக்கும் அது போல் நீங்கள் உங்கள் கடவுள் கொள்கையை விளக்குங்கள்.உங்கள் கடவுள் ஒன்றா? இரண்டா? மூன்றா? ஒன்று தான் என்றால் அது யார் விளக்குங்கள் என்றேன் இன்னும் சில கேள்வி கேட்டதும் கொஞ்சம் வேலை இருக்கு பிறகு பேசலாம் என்று கூறி நடையை கட்டி விட்டார்".

நன்றி

திருச்சி சையத் அமீர்

1 comment:

  1. The ONE TRUE GOD guides whom ever he wants....

    GOD is ONE, not more than one
    GOD is not in need of anything, The one who needs help can not be god
    GOD has not parents, if he has parents, then who is god of parents?
    GOD has not son, if God has son, then his like like us (not possible)
    NOTHING LIKE GOD, so no creation can be described as god.

    Allah is Pure from all false Gods that these people have made themselves.

    GOD make creations,,, BUT Creations(people) can not make their GOD.

    ReplyDelete

Powered by Blogger.