இந்து அடிப்படைவாதத்தின் பின் சென்றால், அமைதி ஏற்படாது - தமிழர் பகுதிகளில் இனரீதியிலான நிகழ்ச்சி நிரல்
அடிப்படைவாதிகளின் பின்னால் தமிழர் தரப்பு செல்லுமாயின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிலையான ஒற்றுமையை உருவாக்குவது வெறும் கனவாகவே மாறிவிடும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலய விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை வரையறை குறித்த எந்தவித சுற்றுநிருபமும் கிடையாது. ஆனால், ஒழுக்கமான ஆடை அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், நாட்டில் பொதுவாக ஆசிரியைகள் சேலை அணிவதை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா எனும் முழு உடலையும் மறைக்கும் விதமான ஆடைகளை அணிபவர்களாக பெரும்பாலான பகுதிகளில் இருக்கின்றனர். இதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்தில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வந்தமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆடை இந்துக் கலாசாரத்தில் ஒருபோதும் தாக்கம் செலுத்தப் போவதில்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் ஹபாயாவை இந்து விரோதமாகக் கொள்ளத் தேவையில்லை.
நாட்டில் அண்மைக்காலமாக குறிப்பிட்ட சில சிங்களக் குழுக்கள் முஸ்லிம்கள் மீது இனவாத ரீதியிலான பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்தனர். அதனை அரசியல் கருவியாகவும் பயன்படுத்தி வந்தனர். தற்போது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலும் இவ்வாறான இனரீதியிலான நிகழ்ச்சி நிரலொன்று முன்னெடுக்கப்படுவதாக சந்தேகிக்கத் தோன்றுகின்றது.
சுயநிர்ணய போராட்டத்தை மேற்கொண்டு பல இழப்புகளை தமிழ் மக்கள் சந்தித்திருக்கின்றனர். தமிழர்களின் உரிமைகளுக்காக அன்று நாம் வீதியில் இறங்கிக் குரல் கொடுத்தோம். இன்று மீண்டுமொரு அசாதாரண நிலைமையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விளைவை நன்கு உணர்ந்துள்ள தமிழ் மக்கள் மற்றுமொரு கசப்பான சந்தர்ப்பத்தை நிச்சயம் எதிர்ப்பார்கள் என்றே கூறவேண்டும்.
தமிழர்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதற்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என்பதைத் தமிழர்கள் நன்கறிவார்கள். முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றிணைந்தால் இலகுவான தீர்வை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுபடுவதை பேரினவாத சக்திகள் விரும்புவதில்லை. இந்நிலையில் சிங்களப் பேரினவாதிகளின் எதிர்பார்ப்புக்கு சாதகமானதொரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்துவிடக்கூடாது.
தமிழர்களின் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இதனால் இரு சாராருக்குமிடையே நம்பிக்கை பலப்படும்.
அவ்வாறின்றி சிவசேனா போன்ற அமைப்புகளுடனான தொடர்புகளைக் கொண்டிருப்போர், இந்து அடிப்படைவாதத்தின் பின்னால் சென்றால் வடக்கிலும் கிழக்கிலும் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியாது போய்விடும். இதற்குத் தமிழ் தலைமைகள் ஒருபோதும் துணைபோகக்கூடாது. இலங்கையில் இஸ்லாமியர்களிடையே அடிப்படைவாதம் கிடையாது. அவ்வாறு அடிப்படைவாதம் உருவெடுக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எனவே, வடக்கிலும் கிழக்கிலும் தலைதூக்கும் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்த தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இதற்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli
Well said, Mr. Mujibur Rahman
ReplyDeleteமகிந்த வின் free பிரியாணிக்கும் சாரயத்திற்கும் ஆசைப்பட்டு, முஸ்லிம்கள் தமிழ்ர் ஆதரவு ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததை ரகுமான் சாரு மறந்துவிட்டார் போலும், பாவம்.
ReplyDeleteஹிந்து பயங்கரவாதம் இலங்கையில் வளர்த்துக்கொண்டு வரும் நிலையில் அகண்ட பாரதம் எனும் கோட்பாட்டில் இந்திய நாய்கள் இலங்கையை விழுங்க பல ஹிந்து தீவிரவாதிகளை இலங்கையில் களமிறக்கியிருப்பதை சிங்கள மக்களிடம் தெளிவாகவும் பின்னாட்களில் ஹிந்து பயங்கரவாதிகளால் அகண்ட பாரத கோட்பாடு பற்றியும், அதனால் இலங்கை சிங்கள ஆட்சிக்கு காத்திருக்கும் ஆபத்து பற்றியும் சிங்களவர்களை தெளிவடைய செய்ய முஜிபுர் ரகுமான் முயற்சி செய்ய வேண்டும்
ReplyDelete@Gtx,
ReplyDeleteஇனி இந்த மூட்டி விடுறது கோத்து விடுறது எல்லாம் கடினம். முடிந்தால் 2009ம் ஆண்டுக்கு முன் முயட்சித்து பார்த்திருக்கலாம். சிங்களவர்களின் தெளிவுத்தன்மையே கண்டி திகன புரட்சி என்று கூறியாகவேண்டும். இனியும் அகண்ட பாரதம் என சப்பை கட்டு கட்டினால் பாகிஸ்தான் நிச்சயம். கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு பாகிஸ்தான் என கப்பலேற்றப்படுவது நிச்சயம். இதையே நாங்கள் தெளிவு படுத்தினால் உங்களுக்கு தீர்க்கதரிசி ஞானசரதேரர் அவர்கள் சொன்னது போல மீண்டும் எழும்பி நிற்க முடியாத அளவுக்கு தான் இருக்கும்.
anusath உலக அரசியலும் சிங்களவனிடம் 50 வருடங்களாக அடிவாங்கியும் அவன் இயல்பையும் அவன் தந்திரத்தை புரிந்துகொள்ளமுடியாத மடையர்கள் தான் ஈழ தமிழ் பயங்கரவாதிகள். மித மிஞ்சிய கட்பனை, தங்களை தவிர மற்றவர்களெல்லாம் முட்டாள்கள் என்று எண்ணி தான் பிரபாகரனும் அவன் புலி கூட்டமும் உரு தெரியாமல் அழிந்து உன் சமுதாயத்தையே அழித்தது. உண்மையில் சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் மேல் எந்த விட பயமும் இல்லை. அவர்களுடைய அற்ப அரசியல் தேவைக்கும் அவர்கள் பயப்படும் ஈழ சிந்தனையை ஒடுக்கவுமே தான் முஸ்லிம்கள் மீது இனவாதத்தை திருப்பினார்கள். காரணம் நாங்கள் அழிந்து நாசாமாகிவிட்டோம் சோனி அழிய மாட்டானா என்று நாக்கை தொங்கவிட்டு நாயை போல் காத்திருந்த அற்ப தமிழ் பயங்கரவாதிகளை முஸ்லிம்களுக்கு எதிராக முழுமையாக திருப்பி ஈழ சிந்தனையை மளுக்கடிப்பதே நோக்கம். சிங்கள கத்தி மீண்டும் ஒருமுறை உங்கள் பக்கம் சில வருடங்கள் கழித்து திரும்பும் அதுவரை சோனி பாகிஸ்தான் போகவும் மாட்டான் உங்களை போல் அடி வாங்கி சாகவும் மாட்டான் இதே இலங்கையிலிருந்து பார்க்க தான் போகிறீர்கள்.
ReplyDeleteஇந்துப் பயங்கரவாதம் இலங்கையில் 'சடுகுடு' விளையாட்டு விளையாடுவதை இலங்கை மக்கள், பாகிஸ்தானின் ஊடாக இலங்கை அரசிற்கு தெரிவித்து, அதை முற்றாக அழிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
ReplyDeleteGt x, very well said. Anusath's day dream will always remain the day dream.
ReplyDelete@sampanthan tna, கனவு காணதீர்கள்.
ReplyDeleteபாக்கிஸ்தான் ஒரு டம்பா நாடு. அமேரிக்காவிற்கு பயந்த நாடு. நாட்டில் எங்க எப்ப குண்டு வெடிக்கும் என யாருக்கும் தெரியாது. பயத்தில் ஒருவரும் அங்கு போவதில்லை.
கண்டி கலவரத்தின் போது கூட ஏன் என கேட்கவில்லை.