Header Ads



ரணிலுக்கு வழங்கப்பட்ட கடிதங்கள், மைதானத்தில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு

கடந்த 28ம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்குவதற்காக பிரதேசவாசிகளால் கிளிநொச்சி அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களின் ஒரு பகுதி நகரத்திலுள்ள மைதானத்தில் வீசப்பட்டுள்ளது.

குறித்த கடிதங்களை அதனை ஒப்படைத்த பொதுமக்கள் மைதானப்பகுதியிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து தருமாறும் சில தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறும் கோரி பிரதமருக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட கடிதங்களே இவ்வாறு வீசப்பட்டுள்ளன.

குறித்த கடிதங்களை கண்டெடுத்த பொதுமக்கள் பலர் அதனை அங்குள்ள அரசியல்வாதிகளிடம் கையளித்துள்ளனர்.

அதன்படி குறித்த கடிதங்களை வீசியவர்கள் தொடர்பில் கண்டறியப்பட்டதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

1 comment:

  1. இவனெல்லாம் வீட்டுக்கு சென்று ஓய்வூ எடுக்குற நேரம் இப்போது இனி இந்த கிழடு ஒன்றுக்கும் உதவாது.

    ReplyDelete

Powered by Blogger.